Primary Menu

Top Menu

October 15, 18

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 – 2019

14-04-2018 முதல் 13-04-2019 வரை

 

அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை

 

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

 

நல்லது நடக்கும்!

 

விளம்பி வருடம் பிறக்கும்பொழுது உங்கள் ராசியிலேயே சூரியனும், சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் இருக்கின்ற குரு, உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் 3, 11 ஆகிய இடங்களிலும் குருவின் பார்வை பதிகிறது.

 

சுக ஸ்தானத்தில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 9–ம் இடத்தில் செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்றுள்ளது. விரய ஸ்தானத்தில் சந்திரனும், புதனும் சஞ்சரிக்கிறார்கள்.

 

வருடம் பிறக்கும் பொழுது உலா வரும் இந்த கிரக நிலைகளை, உங்கள் ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கிரகங்கள் சாதகமாக இருந்தால்தான், சாதனை நிகழ்த்தி சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும். கிரக பலம் குறைந்தவர்கள் வேதனைகள் விலகவும், வெற்றியை எட்டிப் பிடிக்கவும் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். இறைவழிபாடு உங்களுக்கு இனிமை சேர்க்கும்.

 

இந்த ஆண்டு சித்திரை மாதப் பிறப்பு சனிக்கிழமையில் பிறக்கிறது. உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்குச் சனி பகை கிரகமாக இருந்தாலும் கூட செவ்வாய், சனி இரண்டும் குரு வீட்டில் சேர்க்கை பெற்று ஆண்டு தொடங்குவது யோகம்தான். சனி உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். எனவே தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவானுக்குரிய கிழமையில் இந்த ஆண்டு பிறப்பதால் தொழில் வளர்ச்சி மேலோங்கும். கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும்.

 

கை நழுவிப்போன பொருள் கச்சித மாக வந்துசேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்ரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் வருடப்பிறப்பு நிகழ்கிறது. 4–க்கு அதிபதி சந்திரன் 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனுடன் இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 

குரு பார்வை பலன்!

 

ஆண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியையும், 3, 11 ஆகிய இடங் களையும் பார்க்கிறார். உங்கள் ராசியைப் பார்க்கும் குருவால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தானாக நடைபெற்று மகிழ்ச்சிப்படுத்தும். தேக நலன் சீராகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

 

திறமைசாலிகள் உங்களுக்கு உதவுவார்கள். மனையில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும் வாய்ப்பு உண்டு. குருவை வழிபடுவதன் மூலம் உங்கள் யோசனைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

 

3–ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முன்னேற்றம் கூடும். உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். 3–ம் இடத்தில் சகாய ஸ்தானம் என்பதால், அனைத்து வழிகளிலும் சகாயம் கிடைக்கப்போகிறது.

 

குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வழக்குகள் சாதகமாகும். சச்சரவுகளை உருவாக்கிய சகோதரர்கள் இனி சமாதானக் கொடிபிடிப்பர். விலகியிருந்த பெற்றோர், குடும்பத்துடன் இணைவார்கள்.

 

11–ம் இடத்தைக் குரு பார்ப்பதால், பணவரவு திருப்தியளிக்கும். மூத்த சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். முக்கியப் புள்ளிகளில் ஒருவராக நீங்கள் மாறும் வாய்ப்பு உருவாகலாம்.

 

செவ்வாய்– சனி சேர்க்கையும், பார்வையும்!

 

14.4.2018 முதல் 29.4.2018 வரை தனுசு ராசியில் செவ்வாய், சனி சேர்க்கை ஏற்படுகின்றது. அதன் பிறகு 20.3.2019 முதல் 13.4.2019 வரை செவ்வாய் சனியைப் பார்க்கும் அமைப்பு உள்ளது. இந்த காலகட்டங்களில் எதிலும் கூடுதல் கவனம் தேவை.

 

விருச்சிகத்தில் குரு!

 

புரட்டாசி மாதம் 18–ந் தேதி (4.10.2018) வியாழக்கிழமை அன்று, குரு பகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு 8–ம் இடத்திற்கு வருவது நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வந்து சேரும். பயணத்தின் போது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

 

அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. குருவைப் பொறுத்தவரை இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கே பலன் அதிகம். அந்தஅடிப்படையில் பார்க் கும் பொழுது 2–ம் இடத்தைப் பார்க்கும் குருவால், வரவு எதிர்பார்த்த படியே வந்துசேரும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் மாறி சமாதானம் பிறக்கும்.

 

4–ம் இடத்தில் பதியும் குரு பார்வையால், வீடு வாங்கும் யோகம் உண்டு. அங்ஙனம் வாங்கும்போது யோக திசை பார்த்து வாங்குங்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கல்யாண வாய்ப்பு கைகூடும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். பிறருக்குப் பொறுப்பு சொல்லிவாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும்.

 

12–ம் இடத்தை குரு பார்ப்பதால், பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்பவும், சொந்த ஊரில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உருவாகும். பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும். வீடு மாற்றமும், நாடு மாற்றமும் விரும்பத்தக்கதாக அமையும். சுபகாரியச் செலவுகள் மேலோங்கும் நேரம் இது.

 

ராகு–கேது பெயர்ச்சி!

 

13.2.2019–ல் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்க இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 3–ல் சஞ்சரிக்கப் போகும் ராகு முன்னேற்றப் பாதைக்கு வழி காட்டப் போகிறார். 9–ல் சஞ்சரிக்கும் கேது ஒளிமயமான வாழ்விற்கு உத்தரவாதம் தரப்போகிறார். உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். ஆதரவு தருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் விலகுவர்.

 

வளர்ச்சிக்குரிய வழிபாடு!

 

செவ்வாய்க்கிழமை தோறும் விரதம்இருந்து செல்வமுத்துக்குமரனை வழிபடுவதோடு, வயதுக்கேற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ‘சரவணபவ’ என்று எழுதி வாருங்கள். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

 

குரு மற்றும் சனி வக்ர காலங்கள்

 

உங்கள் ராசிக்கு குரு பகவான் 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். அதன் வக்ர காலத்தில் திட்டமிட்ட காரியங் களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். லாபம் எவ்வளவுதான் வந்தாலும், செலவு இருமடங்காகும். புதிய முதலீடு செய்து தொழிலை விரிவு செய்ய நினைத்தவர்கள், முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பிச் செயலில் இறங்க வேண்டாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் அப்போதைக்கப்போது கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்வது நல்லது.

 

சனியின் வக்ர காலத்தில் தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். பங்குதாரர்கள் மட்டுமல்லாமல் பணியாளர்களின் ஒத்துழைப்பும் குறையக்கூடும். சனி வழிபாடு சஞ்சலம் தீர்க்கும்.

அப்துல் காலம் பிறந்தநாள் மோடி,மம்தா ட்விட்டரில் கருத்து?

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon