Primary Menu

Top Menu

April 24, 18

மர்ம நபர்களால் பிரபல பாப் பாடகர் மீது துப்பாக்கிச்சூடு

பிரபல பாப் பாடகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்கூடு நடத்தியுள்ளனர். இதில் பாடகர் மற்றும் அவரது நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பஞ்சாப் மாநில பிரபல பாப் பாடகர், பர்மிஷ் வர்மா, மொஹாலியில் சமீபத்தில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின், நள்ளிரவு அவர் வீடு திரும்பிய போது, அடையாளம் தெரியாத நபர்கள், பர்மிஷ் வர்மாவை துப்பாக்கியால் சுட்டனர்.

 

இதில், அவரது காலில் குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் பர்மிஷுடன் வந்த அவரது நண்பரும் காயம் அடைந்தார். இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடுக்கு பொறுப்பேற்பதாக, பஞ்சாபின் நிழல் உலக தாதா, தில்ப்ரீத் சிங் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளான். அதில் கையில் துப்பாக்கியுடன், அவன் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Partha

In4 Network Author

தளபதி விஜய் கண்ணாலே காதல் பேசும் மன்னன் – பிரபல ஆர்ஜே

நடிகர் விஜய் பள்ளியில் படிக்கும் போது...

Leave a Reply