அமெரிக்க மற்றும் கம்போடியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையேயான உறசிவ் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பணியாளர்களின் ஆபாச படவீடியோ பகிர்வு பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
கம்போடியா நாட்டின் தலைநகர் நாம்பென்னில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இதன் பணியாளர்கள் 32 பேர், சமூக வலைத்தளம் மூலமாக ஆபாச படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருடன் தொடர்பு உடைய இந்த ஆபாச படங்கள், வீடியோக்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘பேஸ்புக்’ மெசேஞ்சர் குரூப்பில் பகிரப்பட்ட இந்த ஆபாச வீடியோக்களையும், படங்களையும் அமெரிக்க தூதரக ஊழியர் ஒருவரது மனைவி பார்க்க நேரிட்டு உள்ளது. இதுபற்றி அவர் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
அதைத் தொடர்ந்து முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் 32 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டு விட்டன. அவர்களது செல்போன்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த விவகாரம் அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை எப்.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த ஆபாச வீடியோ, பட பகிர்வு விவகாரத்தில் சிக்கி உள்ள பலரும் கிளார்க்குகள் மற்றும் பாதுகாவலர்கள் ஆவார்கள்.
கம்போடியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த ஆபாச படம், வீடியோ பகிர்வு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
