Primary Menu

Top Menu

July 21, 18

கோஷமிட்டால் மட்டும் போதுமா? – ராகுல் காந்தி கண்டனம்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு , பிரதமர் மோடி வெறும் கோஷமிடுவதால் மட்டும் போதாது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். உ.பி.யில் உன்னாவ் மாவட்டத்தில் ஆளும் பா.ஜ. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளன.

 

இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று நளளிரவு டெல்லி இந்தியா கேட்டில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவருடன் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

அப்போது ராகுல் பேசியது, பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கோஷம் எழுப்புகிறார். அது நல்ல கோஷம் தான். ஆனால் வெறும் கோஷம் போட்டால் மட்டும் போதுமா? கீழே இறங்கி வந்து அதை செயல்படுத்தி பெண் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றார்.

மதுரையில் காந்தி மியூசியம் அருகே அன்பு சுவர்

வீட்டில் உபயோகம் இல்லாத நல்ல பொருள்களை...

Leave a Reply