Primary Menu

Top Menu

August 18, 18

முன்னால் முதல்வர் ஜெயலிதா வேடத்தில் காஜல்!

முன்னால் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரும், சினிமா நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் என்.டி.ஆர். கேரக்டரில் அவரது மகன் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்திற்கு பூஜை போடப்பட்டது. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்.டி.ஆருடன் பல படங்கள் நடித்துள்ளார்.

இளமை கால ஜெயலலிதா வேடத்துக்காக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் பாலகிருஷ்ணாவுடன் ஷூட்டிங்கில் நடிப்பதுபோல் அவரது காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும் பட வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த படத்தை தேஜா இயக்குகிறார்.

என்.டி.ஆர். தனது இளமை காலத்தில் சென்னையில் அரசு பணியில் இருந்தார். இந்த பணியை அவர் ஒரு மாதம்தான் செய்தார். பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததும் அரசு பணியை விட்டுவிட்டார். இந்தக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon