Primary Menu

Top Menu

September 21, 18

சென்னையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை!

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடத்தப்படும், ‘டிபெக்ஸ்போ- – 18’ என்ற ராணுவ கண்காட்சி, வரும் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடத்தப்படுவது, இதுவே முதல் முறை.

 

ராணுவ தளவாட உற்பத்தியில், இந்தியாவின் வலிமையை, சர்வதேச அளவில் வெளிப்படுத்தவும், உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின், தளவாட உற்பத்திகளை அதிகரிக்கவும், 800 கோடியில், இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

 

கண்காட்சியில், 162 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட, 701 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, மொத்த அரங்கில், 15 சதவீத இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.’பெல், டாடா, பிரம்மாஸ்’ உள்ளிட்ட முக்கிய இந்திய நிறுவனங்களும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ரபேல், ஏர்பஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும், கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

 

ராணுவ கண்காட்சியை பார்வையிட, நேற்று பிரபல கிரிக்கெட் வீரர், மகேந்திரசிங் தோனி, ராணுவ உடையில் வந்தார்; ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டார். அவரது திடீர் வருகை, பார்வையாளர்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon