Primary Menu

Top Menu

April 24, 18

கர்ப்பிணிப் பெண் நடனமாட மறுத்ததால் மேடையில் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பாடகி ஒருவர் திருமண நிகழ்வில் பாடிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

22 வயதே கர்ப்பிணிப் பெண்ணான சமீனா சாமன் என்ற பாடகி மேடையில் அமர்ந்துகொண்டே பாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் பாடகியிடம் எழுந்து நின்று பாடுமாறு கூறினார்.

 

அவரும் எழுந்து நின்று பாட துவங்கினர். இது போதாது ஆடு என அந்த நபர் கூற, பாடகி தான் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி மறுத்துள்ளார். அதற்கு கோபமான அந்த நபர் துப்பாக்கியால் பாடகியை சுட்டுவிட்டார்.

 

படுகாயத்துடன் கீழே விழுந்த பாடகியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

Partha

In4 Network Author

Leave a Reply