Primary Menu

Top Menu

August 18, 18

பலாத்கார வழக்கில் சரணடைவதாக கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ. நாடகம்!

உ.பி. மாநில பா.ஜ.க. எம்.எல்.எ. ஒருவர் இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்கார வழக்கில் போலீசில் சரணடைவதாக கூறியது நாடகம் என்று தெரியவந்துள்ளது.

 

உ.பி. மாநிலம் உன்னாவ் சட்டசபை தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 18 வயது இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

பெண்ணின் தந்தை பப்பு சிங்கை மர்ம கும்பல் ஒன்று தாக்கியது. அவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் மீது, நடவடிக்கை எடுக்காத போலீசாரின் அலட்சிய போக்கை கண்டித்து, பப்பு சிங்கின் மகள், லக்னோவில் உள்ள முதல்வர் வீடு முன், தீக்குளிக்க முயற்சித்தார்.

 

இந்நிலையில், இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், , சிறப்பு புலனாய் குழு விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கர் போலீசில் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எஸ்.பி. அலுவலகத்தில் இரவு செய்தியாளர்கள் குவிந்தனர். பின்னர் அவர் சரணடையவதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது.

 

பின்னர் எம்.எல்.ஏ. குல்தீப்சிங் சென்கர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் சி.பி.ஐ. வசம் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon