Primary Menu

Top Menu

July 21, 18

கடல் ஆராய்ச்சிக்காக நாளை விண்ணில் பாயும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ கோள்!

கடல்சார் ஆராய்ச்சிக்காக செயற்கை கோள்ளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இதில் முதற்கட்டமாக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

 

அது போன்ற வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோள் நாளை ( ஏப்.12) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அதிகாலை 4.04 மணியளவில் விண்ணில் செலுத்தப்படுகிறது.

 

1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.சி-41 .ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

 

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியது, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.ல1ஐ  செயற்கைக் கோளில் இருந்து பெறும் தகவல்கள் ,செயற்கைக்கோளின் சிக்னல் ரிசீவர்கள் ப்ளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும்.

 

இதன்மூலம், கடலில் தாங்கள் இருக்கும் பகுதி, வானிலை எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றார்.

மதுரையில் காந்தி மியூசியம் அருகே அன்பு சுவர்

வீட்டில் உபயோகம் இல்லாத நல்ல பொருள்களை...

Leave a Reply