Primary Menu

Top Menu

September 20, 18

2018ல் புதிய இந்தியா பிறக்குமோ? மக்களே உஷார்..

தற்போது புழக்கத்தில் உள்ள உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு எந்த நேரத்திலும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் 1000 போன்ற உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவிப்பு செய்தார்.

அதற்கு மாற்றாக முற்றிலும் புதிய வடிவத்தில் 500 மற்றும் 2000 நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்படும் என்றும் அறிவித்தார். கூடவே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளவும் போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டது.

உயர் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றுவதற்கு மிகவும் சிரமப்படுவதால்தான், அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கியானது இன்னும் புழக்கத்திற்கு விடவில்லை. பொதுமக்கள் எளிதில் மாற்றம் வகையில் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்திற்கு விடும் முடிவிற்கு வந்துள்ளது போல் தெரிகிறது. இதன்மூலம் தற்போது புழக்கத்தில் உள்ள உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு எந்த நேரத்திலும் அறிவிக்கலாம்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்வது நல்லது. இல்லை என்றால்? கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றவதற்கு தெருத்தெருவாய் அலைந்ததை சற்று நினைத்துப்பாருங்கள்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon