Primary Menu

Top Menu

April 26, 18

ஐடி ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் கொடுக்கும் இந்தியா

இந்தியா, ஐடி ஊழியர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது என்ற எண்ணம் இருந்து வருவது ஒரு புறமிருந்தாலும் உண்மையில் இத்துறையில் ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் அனைத்து இடங்களிலும் புகுந்துள்ள நிலையில் இத்துறையின் வளர்ச்சியும் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாகவே உள்ளநிலையில் உலகநாடுகளில் தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஒரு முக்கிய ஆய்வு நடத்தப்பட்டதில் மோசமான, அதாவது மிகக் குறைவான சம்பளம் வழங்கும் நாட்டுகள் பட்டியலில், இந்திய ஐடி நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்திய ஐடித்துறை ஊழியர்களின் சராசரி சம்பளத்தின் அளவு வருடத்திற்கு 41,213 டாலராக உள்ளநிலையில் சம்பள நிலையை ஒப்பிடும் போது சுவிஸ் நாட்டில் இதன் அளவு சுமார் 4 மடங்கு அதிகமாக உள்ளது. இந்த ஆய்வு முழுவதும் ஐடித்துறையின் நடுநிலை ஊழியர்களின் சம்பளத்தை மையமாக வைத்துக்கொண்டு நடத்தப்பட்டது.

இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வளர்ந்து வரும் ஆட்சேர்ப்பு நிறுவனமான MyHiringClub.com உலக ஐடி ஊழியர்களின் சம்பளம் 2015 என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் மிக மேசமான சம்பளத்தை வழங்கும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவை விடவும் மோசமான நாடுகள் இப்பட்டியலில் பல்கேரியா (25,680 டாலர்) முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அதன் பின் வியட்நாம் (30,938 டாலர்), தாய்லாந்து (34,423 டாலர்) ஆகிய நாடுகள் இடம்பெற்று இந்தியாவை 7வது இடத்திற்குத் தள்ளியுள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் அவுட்சேர்சிங் மற்றும் ஆப்ஷோர் நடவடிக்கைகளின் மூலமே உலக நாடுகளில் ஐடி ஊழியர்களின் சம்பளம் மாறுபடுகிறது என MyHiringClub.com மற்றும் FlikJobs.com நிறுவனங்களின் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

இதேவேளையில் பல்கேரியா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளை அடுத்து இந்தோனேசியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் பின், பிலிப்பைன்ஸ் (37,534 டாலர்), இந்தியா (41,213 டாலர்), சீனா (42,689 டாலர்), செக் குடியரசு (43,219 டாலர்), மற்றும் அர்ஜென்டினா (51,380 டாலர்) ஆகியவை அடுத்தெடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

மேலும் அதிகச் சம்பளம் அளிக்கும் நாடுகளில் சுவிஸ் 1,71,465 டாலருடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் (1,52,430 டாலர்) 2வது இடத்திலும் உள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. இதன் பின் டென்மார்க், அமெரிக்கா, பிரிட்டன் அடுத்தெடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. பன்னாட்டு ஐடி நிறுவனங்களுக்கு இந்திய சந்தை இன்றளவும் விரும்பத்தக்க நாடுகளாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் குறைவான செலவில் திறமையான பணியாளர்கள் கிடைப்பது தான். ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்த நிலை முற்றிலும் மாறிவிடும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது. எனவே ஐடி துறையில் பணியாற்றுவோர் கொஞ்சம் உஷாரா இருக்க வேண்டும்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

பழி குலத்தாழ்வினும் களவு பேரிழிவே

கலித்துறை
மா விளம் விளம் விளம் மா
 

தள்ள...

Leave a Reply