Primary Menu

Top Menu

March 19, 18

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வேலைக்கார தேனீக்கள் !

வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன் மாதிரி டா என்று நம்மவர்கள் சொல்வதை செவிகொடுத்து கேட்டிருப்போம். ஆனால், ஒரு அமெரிக்கர் தன் பணிநேரத்தை தாண்டி வேலை செய்வது இல்லையாம். இந்தியர்கள் இந்த வகையில் வெள்ளைக்காரர்களுக்கு முன்னுதாரணமானவர்கள்.
சம்பளம் கூடக் குறைய கொடுத்தாலும், தனக்கு கொடுத்த வேலையை முடிக்காமல் செல்லமாட்டார்கள். தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு செலவை குறைத்து கொடுப்பார்கள். எந்த வேலையையும் இந்தியர்களை நம்பி ஒப்படைக்கலாம் என்ற பல்வேறு கருத்துக்கள் மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவுவதாக நாம் அறியமுடிகிறது.

அந்த வகையில் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே பெருமை சேர்த்த பேரறிவாளர்கள் உலகம் முழுவதும் பரந்து பறந்து கொண்டிருக்கிறார்கள்.

கூகுள் பிச்சை

குறுகிய காலத்தில் எல்லா தேடல் உலாவிகளும் கூகுளையே தங்கள் ஆஸ்தான தேடல் பொறியாக நியமிக்கும் அளவிற்கு அசுர வேகத்தில் கூகுள் வளர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் இந்த சுந்தர் பிச்சை தான். நிறுவன வளர்ச்சியில் இவரின் அர்ப்பணிப்பும், கணிசமான பங்களிப்பும் உண்டு என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.

வெறும் தேடல் பொறியாகவே இல்லாமல் நமக்கான தனி உலாவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மேல் நிர்வாகத்திற்குப் புரியவைத்தார். கணினிகள், மடிக்கணினிகளின் உற்பத்தியில் உள்ள தேக்க நிலையைக் கண்டறிந்து இனி வருங்காலம் ஸ்மார்ட் போன்களுக்குத்தான் என்று முன்கூட்டியே கணித்து ஆன்டிராய்டு உற்பத்தியில் இறங்கினார்.

அவர் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையிலும், தொழில் போட்டிக்கிடையே அவரைத் தக்கவைக்கும் பொருட்டும் அளித்த பதவி உயர்வுதான் நடுத்தட்டு தமிழ்குடும்பத்திலிருந்து வந்த சுந்தர் பிச்சையை கூகுள் CEO வாக முன்னிருத்தியுள்ளது. இது திறமையைக் காட்டிலும் அவரது நேர்மைக்கும், அர்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி.

மைக்ரோ சாப்ட் நாதல்லா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றியுள்ள நாதல்லா ‘பிங்’ தேடுபொறி (Bing) திட்டத்தில் ஒரு முக்கிய பொறுப்பு வகித்து அது வளர உதவியுள்ளார்.

தகவல்தளம், விண்டோஸ் சர்வர் போன்ற மைக்ரோசாப்ட்டின் மிக பிரபலமான தொழில்நுட்பங்களில் சிலவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவந்த பெருமை இவரைச் சேரும். மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365ல் நாதல்லா பங்காற்றியுள்ளார்.

பெப்சி நூயி

உலகின் மதிப்புமிக்க வலிமை வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக இந்திரா நூயி பல முக்கிய பத்திரிக்கைகளால் கொண்டாடப்பட்டவர். இவர், பெப்சிகோ நிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO ஆக பதவியேற்றார். நூயி அவர்கள் நிறுவனத்தின் உலகளாவிய திட்டத்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கின்றார், மேலும் 1997 ஆம் ஆண்டு அதன் உணவுவிடுதிகள் விற்பனையை டிரைகானுக்கு மாற்றியது உள்ளிட்ட பெப்சிகோவின் மறுகட்டமைப்பில் முன்னிலை வகித்தார்.

வணிக அதிகாரிகள் அவரது ஆழமாக வழிநடத்தும் திறன் மற்றும் இதயப்பூர்வமான உழைப்பு மற்றும் வேடிக்கை ஆகியவற்றைக் கண்டு வியப்படைகின்றனர். வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் வெளிவந்த கவனிக்கத்தக்க 50 பெண்கள் பட்டியலில் நூயியின் பெயர் இடம்பெற்றது, மேலும் டைம் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த உலகில் 100 மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் பட்டியலிலும் இடம் பெற்றார். போர்பஸ் பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 3 ஆவது பெண் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டிருந்தது.

அடோப் நாராயன்

ஆப்பிள் நிறுவனத்தில் தன் பணியை துவங்கிய சாந்தணு நாராயன், தற்போது அடோப் நிறுவனத்தில் சிஇஓ. கடந்த நவம்பர் 12, 2007ம் ஆண்டு இப்பதவியில் நியமிக்கப்பட்டார். அடோப் நிறுவனத்தில் தொழில்நுட்பத்துறையில் பல முக்கிய அதிகாரங்களை கொண்டிருக்கும் இவர், அதை வழிநடத்திசெல்வதில் வல்லவர்.

மாஸ்டர்கார்டு அஜய்பால் சிங்

கட்டண முறைகள், கடன் அட்டைகள் போன்ற நிதி சேவைகளை வழங்கும் மாஸ்டர்கார்டு, உலக அளவில் பொதுபங்கு நிறுவனமாகும். இதில் சிஇஓ வாக அஜய்பால் சிங் உள்ளார்.

கடந்த 1981ம் ஆண்டு நெஸ்லே நிறுவனத்தில் பணியை தொடங்கய அஜய்பால்சிங்,பெப்ஸி, நியுயார்க் ஹால் ஆப் சைன்ஸ், நேஷனல் அர்பன் லீக் போன்ற பெரும் நிறுவனங்களில் பணியாற்றி அந்த நிறுவனங்களின் வளர்ச்சியை தீர்மானித்தவர்.

தேனியும் இந்தியனும் ஒன்று. தங்கள் வேலையை தினசரி சுறுசுறுப்பாக செய்து சொந்த நாட்டிற்கு பெயர் வாங்கிக்கொடுத்த பெருமை, இவர்களை சேரும் என்பதை மறுக்க முடியாது.

கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கலின்...

Leave a Reply