Primary Menu

Top Menu

July 17, 18

2015 – உலகை திருப்பிய டாப் 12 நிகழ்வுகள்

2015 ஆண்டில் நிகழ்ந்த முக்கிய செய்திகள்.

ஜன 9ம் தேதி : இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷ தோல்வியை தழுவ, மைத்ரிபால சிறிசேன அதிபரானார்.

பிப் 23ம் தேதி : ஆஸ்கர் விருதுகள் விழாவில் போர்ட்மேன், தி கிராண்ட் புடா பெஸ்ட், ஓட்டல் ஆகிய திரைப்படங்களுக்கு 4 விருதுகள் கிடைத்தன.

மார்ச் 29ம் தேதி : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5வது முறையாக கோப்பையை வென்றது.

ஏப் 22ம் தேதி : ஆப்ரிக்காவில் நிலவிய எபோலா வைரஸ் நோய் செய்திகளை வெளியிட்ட நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு புலிட்சர் விருது கிடைத்தது.

மே 23ம் தேதி : ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வதற்கு அயர்லாந்து அரசு அனுமதி கொடுத்தது.

ஜுன் 4ம் தேதி : மொரிஷியசின் முதல் பெண் அதிபராக அறிவியலாளர் அமினாஹ் பக்கீம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜுலை 28ம் தேதி : இந்தியாவின் ஏவுகணை நாயகன், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் காலமானார்.

ஆக., 20ம் தேதி : கிரிசில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதித்தது.

செப்., 20ம் தேதி : நேபாளத்தில் தேசிய விலங்காக பசு அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 25ம் தேதி : மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை ரஷ்யா 2029ல் நிறைவேற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

நவ., 13ம் தேதி : பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆறு இடங்களில் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தியதில் 130 பேர்
பலியாகினர்.

டிச., 12ம் தேதி : சவுதி அரேபியாவின் நகராட்சி தேர்தல்களில் முதன் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

மனைவியிடம் கோபிக்காதீர்கள்!

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு...

Leave a Reply