Primary Menu

Top Menu

September 21, 18

திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியான 2.0 டீசர் – அதிர்ச்சியில் சங்கர்

‘2.ஓ’ படத்தின் VFX மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் நேற்று இரவு வெளியிட்டார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் எமி ஜாக்ஸன் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேற்று இப்படத்தின் டீசர் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது. இதனால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டனின் லைகா டெலிகாம் நிறுவனத்தில் தயாரிப்பாளர் தரப்பிற்கு டீசர் போட்டு காட்டும்போது, யாரோ அதை முறைகேடாக செல்போனில் பதிவு செய்து இணையத்தில் லீக் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ரஜினி ரசிகர்கள் #2pointO #ChittiIsBack எனும் ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon