Primary Menu

Top Menu

September 20, 18

1084ன் தாய் தியேட்டர் ப்ளே

“1084ன் தாய்” என்ற தியேட்டர் ப்ளே சென்னை கூத்துப்பட்டறையில் நடத்தப்பட்டது.
.
எழுதியவர் வங்காள எழுத்தாளர் மகாஸ்வேதாதேவி.
நாடகத்தை இயக்கி சிறப்பாக வடிவமைத்தவர் ரிஜன் ரோஸ்
.
ஆகஸ்ட் 18 மற்றும் 19ம் தேதி இரண்டு நாட்களும் 5மணி மற்றும் 7மணி அளவில் நடந்தது. பல நாடக ஆர்வலர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரையிலிருந்தும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து காத்திருந்து நாடகத்தை கண்டு ரசித்துச் சென்றனர்.
.
இந்நாடகத்தில் நடித்த கலைஞர்கள் தங்கள் அதீத திறமைகளை வெளிப்படுத்தி நாடகத்திற்கு மெருகூட்டினர். குறிப்பாக தாயாராக நடித்த நடிகை பொற்கொடி “சுஜாதா சாட்டர்ஜியாக” முழுநாடகத்தையும் தனது உச்சபட்ச நடிப்பால் கணீர் குரலால் எடுத்துச் சென்றது அருமை.
.
கைதி எண் 1084 எனும் ப்ரத்தியின் காதலி நந்தினியாக சுதர்ஷி மற்றும் சுஜாதா இடையில் நடைபெறும் உரையாடல்கள் உரிமைக்காக போராடும் குரல்கள் அனுபவிக்கும் சிறையின் கொடுமைகளை அப்பட்டமாகக் காண்பிக்கின்றன.
.
இந்நிகழ்வு சென்னை விருகம்பாக்கத்திலுள்ள கூத்துப்பட்டறை அமைப்பில் நல்ல ஒளிஒலி அமைப்புகளுடன் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தது அருமை.
.
இரண்டாம்நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சர்வதேச திரைப்பட விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு. இரா.செழியன் நாடகம் மிகச்சிறப்பாக நடந்ததைக்கூறி நடித்த கலைஞர்கள் அனைவரையும் இயக்குனரையும் பாராட்டினார்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon