Primary Menu

Top Menu

October 22, 18

காதலிக்குமாறு வற்புறுத்தியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரசுப் பள்ளியில் தமிழரசி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய வகுப்பை சேர்ந்த பசுபதி என்ற மாணவன் தமிழரசியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தமிழரசிக்கு மாணவன் தொல்லை கொடுத்துள்ளான். மாணவியின் ஹால்டிக்கெட்டை கிழித்து போட்டதால் மனமுடைந்து மாணவி தற்கொலை முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது.

நேற்று தமிழரசி பொதுத்தேர்வையொட்டி சிறப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பசுபதி தமிழரசியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான்.தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து பசுபதி தமிழரசியின் ஹால்டிக்கெட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு அதனை கிழித்து போட்டுள்ளான். இதனால் தமிழரசி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon