Primary Menu

Top Menu

July 19, 18

“ஸ்கெட்ச்” திரை விமர்சனம் !!

தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் தான் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் “ஸ்கெட்ச்”. இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

பைக், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்யும், சேட்டிடம் பைனான்ஸ் பெற்று வண்டி வாங்கிவிட்டு, டியூ கட்டாதவர்களின் வாகனங்களை தன் நண்பர்களுடன் ஸ்கெட்ச் போட்டு தூக்கும் வேலை பார்க்கிறார் ஸ்கெட்ச் – விக்ரம். அவர் ஸ்கெட்ச் போட்டால் யாருடைய வண்டியையும் திட்டம் போட்டபடி லாவகமாக தூக்குவதில் படுகெட்டிக்காரர். அந்த குணமே, விக்ரமுக்கு தமன்னாவுடனான ஒரு அழகிய காதலையும், நண்டு சிண்டுகள் தொடங்கி, ராயபுரம் தாதா வரை நிறைய விரோதத்தையும் சம்பாதித்துக் கொடுக்கிறது. அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.

அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க விடாமல், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடன், மீதி கதையை காட்டியுள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.

ஸ்கெட்ச்சாக புது லுக்கில் பழைய லூட்டி விக்ரமை பார்க்க முடிவது ரசிகர்களுக்கு கிடைத்த பெரும் பொங்கல் போனஸ். “சந்தர்ப்பம் சூழ்நிலை, நேரம் இது 3ம் தான் ஒரு மனுஷனை மொத்தமா மாத்துது ….” என அவர் பேசும் முதல் பன்ச்சில் தொடங்கி, ஸ்கெட்ச், ஸ்கெட்ச் பண்ணா ஸ்கெட்ச் மிஸ் ஆகாது, அப்படியே, மிஸ் ஆனா மட்டும் சொல்லு பிசிறே இல்லாமல் செய்து முடிக்கிறேன் ……” என அடிக்கடி, “பன்ச் ” அடிப்பதில் தொடர்ந்து “பசங்க, புக்க தூக்கற வயசுல புக்கதூக்கணும் ” என குழந்தை தொழிலாளர்கள் கூடாது என இறுதி காட்சியில் “பன்ச் “அடிப்பது வரை, சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். வெல்டன் விக்ரம்!

ஹீரோயின் தமன்னாவுக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும், கச்சிதமாக நடித்துள்ளார். மேலும் மாரியாக சூரி, பர்ஸ்ட் ஆப்பில் ஒரு சீனிலும், செகன்ட் ஆப்பில் ஹீரோவுக்கு உதவும் நான்கைந்து சீனிலும் வந்து காணாமல் போகிறார். நாயகரின் எதிராளி ரவியாக, கிட்டத்தட்ட வில்லனாக ஆர்.கே.சுரேஷ், நாயகரின் மாமாவாக அருள்தாஸ், பைனான்ஸ் சேட்டாக மலையாள நடிகர் ஹரீஷ். தமனின் பாடல்கள் படத்தில் ஸ்பீட் பிரேக்கர்களாக மட்டுமே இருந்தன.

மேலும் “ஸ்கெட்ச் ” எனும் டைட்டிலும், விக்ரமின் பழைய ஸ்டைல் நடிப்பும் தான் பெரும்பலம். பின்னர் வழக்கம் போல நார்த் மெட்ராஸ் ரவுடியிஸ் கதை தான் இப்படக் கதையும் என்பது பலவீனம்.

மொத்தத்தில் ஸ்கெட்ச் வழக்கமான வடசென்னை மாஸ் மசாலா படம்.

திரிஷாவின் அசைவுகள் எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது -ஸ்ரீரெட்டி

திரிஷாவை பார்த்துதான் தான் சினிமாவுக்கு...

Leave a Reply