Primary Menu

Top Menu

September 25, 18

வீராட் கோலி – அனுஷ்கா சர்மாவுக்கும் அடுத்த வாரம் இத்தாலியில் திருமணமா !!

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டின் 3 நிலை அணிகளிலும் கேப்டனாக இருப்பவருமான வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த போட்டோக்களை அவர்களே வெளியிட்டு இருந்தனர். மேலும் தொடக்கத்தில் அவர்களுக்குள் சில மனக்கசப்பு ஏற்பட்டிருந்தாலும் பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.

இந்திய அணி, தற்போது இலங்கை அணியுடனான தொடர்களில் விளையாடி வருகிறது. இத்தொடரில் அணியின் தலைவரான கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கு விடுப்பு வழங்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுயிருந்தார். இந்நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறும் என கூறப்பட்டது. மேலும் இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளப்போகிறார்கள் என்றும் திருமணத்துக்கான மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர். பின்னர் டிசம்பர் – 21 ம் தேதி மும்பையில் நடைபெறும் வரவேற்புக்கு இந்த ஜோடி அனைத்து நண்பர்களை அழைக்கும். ஆனால் இது குறித்து இருவர் தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை.

Comments

ஆசிய கோப்பை – ரோகித் , தவான் அதிரடி சதத்தால் இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon