Primary Menu

Top Menu

September 26, 18

விஷாலை வரிசையில் வர சொன்ன ஆர்.கே.நகர் சுயேட்சை வேட்பாளர்கள் !!

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் விஷால். விஷாலின் இந்த திடீர் அறிவிப்பு திரைத்துறை மற்றும் அரசியல்வாதிகளை அதிர்ச்சியானதாக இருந்தது.

மேலும் ஆர்.கே நகரில் திமுக, அதிமுக, பாஜக, தினகரன், நாம் தமிழர் கட்சி, தீபா என்று 6 முனைப் போட்டி நிலவுகிறது. இது மட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஷாலும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.

இன்று காலையில் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திலும், ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலும் தொடர்ந்து சிவாஜி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நடிகர் விஷால்.

பின்னர் சுயேச்சை வேட்பாளர்கள் நாங்களே காலையில் இருந்து வரிசையில் கால் கடுக்கக் காத்திருக்கிறோம். ஆனால் நடிகர் விஷால் மட்டும் விஐபி அந்தஸ்த்துடன் வந்த உடனே மனுத்தாக்கல் செய்யச் செல்வதை ஏற்க முடியாது. மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா இன்று தான் வேட்பு மனு தாக்கலுக்கு வருகிறார். அவரும் இதே மாதிரித் தான் வரிசையில் நின்று மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல் இன்றோடு முடிகிறது. இன்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கலுக்காக 42 சுயேச்சை வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

Comments

நீதிமன்ற அவமதிப்பு – ஹெச்.ராஜா தரப்பு முறையீடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon