Primary Menu

Top Menu

September 26, 18

விராட் கோஹ்லி – அனுஷ்காவுக்கு இப்படி ஒரு வாழ்த்தா !!

இந்திய கிரி்க்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடந்தாலும், நம் நாட்டில் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் அதைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் பாராட்டுக்கள், வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இது தான் பல பத்திரிகைகளில் முக்கியச் செய்தியாக அமைந்தது. பல நிறுவனங்கள் இதை தங்களுடைய விளம்பரத்துக்கும் பயன்படுத்தியுள்ளனர்.

விராட் கோஹ்லி – அனுஷ்கா ஜோடி மட்டுமல்ல, உலகில் கல்யாணமான எந்த ஒரு ஜோடியும் விரும்பாத ஒரு வாழ்த்து, அவர்களுக்கு வந்துள்ளது. அதைத்தான் டுவிட்டரில் பலரும் கிழி கிழி என்று கிழித்து கொண்டிருக்கின்றனர்.

கோஹ்லி – அனுஷ்கா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பலரும் செய்திகள் வெளியி்ட்டுள்ள நிலையில், ஆணுறை தயாரிக்கும் டியூரக்ஸ் நிறுவனம், டுவிட்டரில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. “வாழ்த்துக்கள் அனுஷ்கா – விராட். உங்களுக்கு இடையில் வேறு எதுவும் வரக் கூடாது. எங்களுடையதைத் தவிர” என்று டுவிட்டரில் வந்த வாழ்த்து செய்திக்கு போட்டி போட்டி மக்கள் கொந்தளித்துள்ளனர்.

மேலும் “காலை 6 முதல் இரவு 10 மணி வரை ஆணுறை தொடர்பான விளம்பரம் கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை ஏன் பின்பற்றவில்லை ?” என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். பின்னர் “கல்யாணமாகும் அரசியல்வாதிகளுக்கு இதுபோல் வாழ்த்து கூறுவீர்களா ?” என்றும் மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon