Primary Menu

Top Menu

September 25, 18

வாட்ஸ்ஆப் – ல் "லைவ் லொகேஷன்" அறிமுகம் !!

வாட்ஸ்ஆப் நிறுவனம் இப்போது புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது, மேலும் இந்த பயன்பாடுகள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இந்நிலையில் மக்களுக்கு பயன்படும் வகையில் “லைவ் லொகேஷன்” என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திள்ளனர் இந்த வாட்ஸ்ஆப் நிறுவனம். இந்த பயன்பாட்டின் மூலம் தங்களின் இருப்பிடத்தை தங்களது உறவினர்கள் மற்றும் நன்பர்கள் நேரடியாக பகிர்ந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்ஆப் டெக்னொபோலிஸ் என்ற தொழில்நுட்ப அடிப்படையில் சமீபத்திய 2.17.375 பதிப்பானது பதிவிறக்கம் மற்றும் நிறுவும் போது குறைந்த இடத்தை 6எம்பி தான் எடுத்துக்கொள்கிறது என்றும் கடந்த பதிப்புகளில் இருந்த 20 லைப்ரரிஸ் இந்த பதிப்பில் நீக்கப்பட்டது தான் அதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்ஆப் செயலியில் பயன்படும் “லைவ் லொகேஷன்” தொழில்நுட்பம் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் வரும் காலங்களில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளனர்.

Comments

யூடியூப் கேமிங் ஆப் திடீர் நிறுத்தம் – கூகுள்

யூடியூப் வீடியோ பிளாட்பார்மில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon