Primary Menu

Top Menu

September 24, 18

வயதாகி விட்டால் வெற்றி பெறுவது கடினமா ? முன்னுதாரணம் கூறும் கே.எஃப்.சி

விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவை இணைந்தால் எந்த வயதிலும் வெற்றியை உருவாக்க முடியும் என்பதை கே.எஃப்.சி உரிமையாளர் சாண்டர்சின் வாழ்க்கை பயணம் கூறுகிறது.
கெலோனல் சாண்டர்ஸ் 1890ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். 5 வயதில் தந்தையையும் 12 வயதில் தாய் மறுமணம் செய்துகொள்ள, மாமா வீட்டில் வளர்ந்தார். 15 வயது இருக்கும் போது இராணுத்தில் பணியாற்றினாலும் அந்த வேலையை 4 மாதங்களில் விட்டு விட்டு வீடு திரும்பினார்.

தன் வாழ்க்கையில் முதல் பாதியை ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு என மாறி மாறியே ஆண்டுகள் உருண்டோடியது. அதாவது, நீராவி இரயில் என்ஜினில் எரிபொருள் நிரப்புதல், காப்பீடு விற்பனை, விளக்குகளை உருவாக்குதல், டயர்கள் விற்பனை மற்றும் படகு ஓட்டுனர் போன்ற பல வேலைகளை செய்தார்.

1930ம் ஆண்டில் 40 வயது இருக்கும்போது கென்டக்கி பகுதியில் SHELL OIL நிறுவனத்தின் உணவகத்தை எடுத்து நடத்தியபொழுதுதான் பல மூலிகைகள் மற்றும் மசாலாக்களுடன் சமைக்கப்பட்ட KENTUCKY FRIED CHICKEN (KFC) சிக்கனை தயாரித்தார். இருப்பினும் 1956 ல் 105 டாலர்கள் ஓய்வூதியமாக பெற்று அதிலிருந்து விலகினார். பின்னர் KFC சிக்கன் உரிமையை உணவகத்திற்கு விற்க முடிவு செய்து, 2 ஆண்டுகள் 1009 முறை நிராகரிப்பிற்கு பிறகு KFC சிக்கன் உரிமையை ஒரு உணவகத்திற்கு விற்றார்.

இதனால் அடுத்த 9 வருடங்களுக்குள் 600 உணவகத்தை KFC தொடங்கியது. 1965-ல் Brown என்பவருக்கு $2 மில்லியன் டாலர் தொகைக்கு KFC நிறுவனத்தை கேணல் சாண்டர்ஸ் விற்றார்.

KFC சிக்கன் உரிமையை முதன் முதலில் விற்றபோது அவருக்கு வயது 65. இந்த முதல் வெற்றி பெறுவதற்கு முன்பு 1009 முறை, பல உணவகங்களால் KFC சிக்கன் உரிமை (FRANCHISE) தேவையில்லை என்று சொல்லப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். இரண்டு குக்கர், மாவு, மசாலா கலவைகள் போன்றவைகளை அவரின் காரில் எடுத்துச்சென்று ஊருராக சுற்றித்திரிந்து ஒவ்வொரு உணவகங்களுக்கு சென்று அவரின் சிக்கன் செய்முறையை விளக்கி விற்பனை செய்ய முயன்றார். ஆனால் அவரின் KFC சிக்கனை விற்பனை செய்ய யாரும் தயாராகயில்லை. 1009 முறை விடாமுயற்சிக்கு பிறகு KFC சிக்கன் சுவையில் மக்கள் மயங்கியதால் உணவகத்தின் எண்ணிக்கை அதிகமானது. 123 நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகத்தை கொண்டுள்ளது. McDonald’s பிறகு விற்பனை அளவில் உலகின் இரண்டாவது பெரிய சங்கிலி உணவகம் ஆகும்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon