Primary Menu

Top Menu

July 20, 18

யு.எஸ் டாலரை விட மதிப்பு மிகுந்த சில நாணயங்கள் !

உலகில் அமெரிக்க டாலர் தான் மதிப்பு மிகுந்தவை என்றால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல் அல்ல ! ஏனெனில் அமெரிக்க டாலரையே பின்னுக்கு தள்ளும் சில நாணயங்கள் இருக்கின்றன.

குவைத் தினார்

உலகிலேயே குவைத் தினார் தான் அதிக மதிப்புள்ள நாணயமாக கருதப்படுகிறது. இந்த நாணயம் 1961ஆம் ஆண்டு வளைகுடாவின் ரூபாய்க்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படடது. இது ஒரு பவுண்டு ஸ்டெர்லிங்கிற்கு சமமானதாக இருந்தது. தற்போது இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 210
ஆகும்.

பஹ்ரைன் தினார்

பஹ்ரைன் தினாரை 1965ஆம் ஆண்டில் வளைகுடாவின் ரூபாய்க்கு பதிலாக அறிமுகம் செய்தது. ஆரம்ப காலத்தில் ஒரு தினார் 10 ரூபாய்க்கு சமமாய் இருந்தது. தினார் என்ற பெயர் ரோமனிய வார்த்தையான தினேரியஸ் என்ற பெயரில் இருந்து உருவானதாகும். தற்போது இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 168 ஆகும்.

ஓமன் ரியால்

1940 ஆம் ஆண்டிற்கு முன் இந்திய ரூபாய் மற்றும் மரியா தெரெசா தாலிர் அல்லது ரெயில் என்று உள்ளூரில் அழைக்கப்பட்ட நாணயம் தான் மஸ்கட்டிலும் ஓமனிலும் முக்கிய நாணயமாக கருதப்பட்டது. ஆனால் 1940-ஆம் ஆண்டிற்கு பின்பு சௌதி ரியால் ஓமன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஓமன் ரியாலின் மதிப்பு இந்திய ரூபாயில் 165 ஆகும்.

லாட்வியா லாட்ஸி

ரஷ்யா லாட்வியாவை கைப்பற்றிய போது லாட்வியாவின் நாணயமான லாட்ஸிற்கு பதிலாக சோவியத்தின் ரூபிள் என்ற நாணயம் பயன்பாட்டிற்கு வந்தது. லாட்வியா அதன் சுதந்திரம் பெற்ற பின் 1993-இல் அதன் நாணயம் மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது லாட்ஸியின் மதிப்பு இந்திய ரூபாயில் 102 ரூபாய் ஆகும்.

பிரிட்டன் பவுண்ட்

உலகிலேயே மிகவும் பழமையான பயன்பாட்டில் உள்ள நாணங்களில் ஒன்றாக ஸ்டெர்லிங் உள்ளது. அமெரிக்க டாலர், யூரோ மற்றும் ஜப்பானின் யென்னிற்கு அடுத்து அந்நிய செலாவணி சந்தையில் பண்டை மாற்றம் செய்வதில் நான்காவது இடம் வகிக்கிறது. தங்களது சம்பாத்தியத்தை பெருக்குவதற்காக ஆசிய நாட்டவர்கள் அதிகம் பேர் இங்கிலாந்தில் தான் சம்பாதிக்கின்றனர். தற்போது பிரிட்டன் பவுண்டின் மதிப்பு இந்திய ரூபாயில் 98 ஆகும்.

பாக்லேண்ட் பவுண்ட்

பவுண்ட் என்பது பாக்லேண்ட் தீவுகளின் நாணயமாகும். இது தென் அட்லாண்டிக் பெருங்கடலில் பிரிட்டிஷின் தொகுதியாகும். இந்த நாணயம் ‘£’ என்றும் FK£ என்றும் மற்ற பவுண்ட் ரகங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் குறிக்கப்படுகிறது. தற்போது பாக்லேண்ட் பவுண்டின் மதிப்பு இந்திய ரூபாயில் 98 ஆகும்.

ஜிப்ரால்டர் பவுண்ட்

ஜிப்ரால்டரின் நாணயம் ‘£’ என்று குறிக்கப்படுகிறது. இதனை அதன் மதிப்பிற்கேற்ப பிரிட்டிஷின் பவுண்டு ஸ்டெர்லிங்க்கு மாற்றிக்கொள்ளலாம். இதன் மதிப்பும் இந்திய ரூபாயில் 98 ஆகும்.

ஜோர்டான் தினார்

1967ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஜோர்டர்னின் தினாரானது இஸ்ரேலின் நாணயத்துடன் மேற்கு கரை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1970 மற்றும் 1980இல் இஸ்ரேலின் பெரும் பணவீக்கத்தில் ஜோர்டர்னின் நாணயம் தான் இஸ்ரேலை நிலைப்படுத்தியது. இதன்மதிப்பு இந்திய ரூபாயில் 89 ஆகும்.

யூரோ

யூரோ என்பது யூரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாணயமாகும். இந்த 17 நாடுகளில் பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் போன்றவையும் அடங்கும். யூரோவின் இந்திய மதிப்பு 69 ரூபாய் ஆகும்.

அஜர்பெய்ஜானின் மனாத்

மனாத் என்பது மோனிடா (நாணயம்) என்ற ரஷிய சொல்லில் இருந்து வந்ததாகும்.1919 முதல் மூன்று மனாத் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மிக அண்மையில், இது 2006-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 60 ஆகும்.

கேமன் தீவுகள் (Cayman Islands) டாலர்

டாலர் பயன்படுத்துவதற்கு முன்பு கேமன் தீவுகள் ஜமைக்கன் டாலர்களை பயண்படுத்தி வந்தது. 1972 ஆம் ஆண்டில் கேமன் தீவுகளின் நாணயம் டாலராக மாற்றப்பட்டது. மேலும், இந்த தீவுகளில் டாலர் சட்டபூர்வமாகவும் அங்கிகரிக்கப்பட்டது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 70 ஆகும்.

லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி

கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது...

Leave a Reply