Primary Menu

Top Menu

September 25, 18

யார் இந்த 4ஜி பெண் ?

தினமும் குறைந்தது 10 முறையாவது இவரை ஏர்டெல் 4ஜி விளம்பரங்களில் பார்த்து ரசித்திருப்பீர்கள்.

சேட்டிலைட் சேனல், கிரிக்கெட் ஒளிபரப்பு, ஃப்ளெக்ஸ், விளம்பரங்கள்,பத்திரிக்கை, இணைய விளம்பரம் என நீங்கள் காணும் இடங்கள் எல்லாமே இந்த 4ஜி பெண் காட்சி தருகிறார்.
ஆமாம் ! யார் இவர்? ஒரே விளம்பரத்தில் ஓஹோ என்று சொல்லுமளவுக்கு இந்தியா முழுவதும் பேசப்படும் இந்த இளம் மங்கை டேராடூனைச் சேர்ந்த சாஷா சேத்ரி.

4G சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? ஸ்மார்ட்போன் வச்சிருந்தா ஏர்டெல் மட்டுமே எடு! என தில் சவால் விடுக்கிறார் இந்தப் பெண்.
மேற்படிப்புக்காக மும்பைக்கு வந்த சாஷா, அங்கு சேவியர் இன்ஸ்டியூட் ஆஃப் கம்யூனிகேஷனில் விளம்பரப் பிரிவில் பட்டம்
பெற்றிருக்கிறார்.

பின்னர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியவர், அப்படியே விளம்பரங்களில் நடிக்க முயற்சித்திருக்கிறார். வாய்ப்புகள் சில வந்தாலும், அதைவிட இசை சாஷாவை ஈர்த்திருக்கிறது.
இசைக்குழுக்களில் ‘ரிக்ஷா ராணி’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தியபோது மும்பையில் 4G விளம்பரத்துக்கென நடிகர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனத் தெரிந்து ஆடிஷன் சென்றிருக்கிறார்.

“நான் அன்று அந்தத் தேர்வுக்கு செல்லவே விரும்பவில்லை. ஏனென்றால், என் கூந்தலை அப்போதுதான் கட் செய்திருந்தேன். கிட்டத்தட்ட “டாம் பாய்” போல மிகவும் குறைவாக இருந்தது என் தலை முடி. அதனால் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்த ஹேர்ஸ்டைல்தான் என் அடையாளமாகி விட்டது!’’ என்கிறார் சாஷா சந்தோஷமாக.
தற்போது 4G விளம்பர வரிசை வைரலான பின்னர், அடுத்தடுத்து விளம்பர வாய்ப்புகள் சாஷா மொபைலை தீண்டுகிறது.

ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன் இசைக்குழுவுடன் ஒரு ஆல்பம் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறாராம் சாஷா.
4G விளம்பரம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 20 ம் தேதி வரை மட்டும், 54,406 முறை ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மொத்தமாக 475 மணி நேரம் திரையில் தோன்றியிருக்கிறார் சாஷா. அதே சமயம் சாஷாவை வைத்து, உலா வரும் ஜோக்ஸ், மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை. ஏர்டெல் நெட்வொர்க்கையும், இவரின் விளம்பரத்தையும் வைத்து களைகட்டுகின்றன சோசியல் கலாய்கள்.

Comments

கல்யாண கனவு

அனைவரும் பூஜாவை அலங்கரிக்க தொடங்கினர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon