Primary Menu

Top Menu

September 20, 18

மையம் விசில் ஹேஸ்டக் அறிமுகம் செய்தார் கமல் – சூடுபிடிக்கும் அரசியல் பிரவேசம் !!

மக்களிடம் கருத்து கேட்கவும், மக்கள் மன நிலையை அறியவும் நடிகர் கமலஹாசன் இன்று மையம் விசில் ஹேஸ்டக்கை அறிமுகம் செய்தார். பிறந்த நாளான இன்று அவர் சென்னையில் நிருபர்களிடம் பேசியதாவது:

“நன்றாற்றுள் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றான்கடை” என்பர் அதாவது நல்லது செய்வது பார்த்து செய்ய வேண்டும். நாம் செய்யும் பணி சரியாக செய்ய வேண்டும். இது தான் அரசியலில் சிம்பிள்.

உண்மைகளை மட்டுமே அனைவராலும் எப்போதும் பேச முடியாததாக உள்ளது. நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. மக்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அனைத்து தரப்பு மக்களையும் தெரிந்து கொள்வதற்குதான் இந்த பயணம்.

தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறு தான். நல்லதை செய்தால் மட்டும் போதாது அதை சரியான மக்களுக்கு சரியான நேரத்தில் செய்ய வேண்டும். தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளது, பழுதை சரி செய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும். அக்கிரமங்களுக்கு எதிராக தரப்படும் குரல் குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

மேலும் கட்சியின் பெயரை அறிவிக்க இப்போது அவசியமில்லை; அவசரமில்லை. அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயுத்த பணிகளை தொடங்கி இருக்கிறேன். அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என காத்து கொண்டு இருக்கிறேன். சினிமா எடுப்பதற்கே 6 மாத முன்னேற்பாடுகள் செய்பவன் நான்; அரசியல் அதைவிடப் பெரிய பணி. நான் அரசியல் பொறுப்புக்கு வந்தால், என்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம்.

மக்கள் பிரச்சனைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்கில் பேசலாம். இது ஒரு பொது அரங்கம். நியாயத்திற்கு குரல் எழுப்பும் கருவியாக விசில் இருக்கும். விசில் என்பது தீமை நடக்கும் போது, நன்மை நடக்க யார் வேண்டுமானானாலும் அடிக்கலாம். இது பல்வேறு காரியங்களுக்குரியது.

விசில் புதிது அல்ல. அக்கிரமம் நடக்கும் போது குரல் கொடுக்கப்பட வேண்டியது. இது குறைந்து விட்டதால் நியாயத்திற்கான குரல் வலுப்பெற வேண்டும் என நான் நம்புகிறேன். இந்த விசிலை எனது ஆதரவாளர்கள் அடிக்க வேண்டும். விசில் அடிப்பீர்களா ? என்று கேட்டார். (சிலர் அந்நேரத்தில் விசில் அடித்தனர்).

இவரின் இந்த புதிய முடிவு முதல்வன் படத்தில் இடம்பெற்ற புகார் பெட்டியை நினைவுப்படுத்துகிறது. இரண்டு விஷயங்களும் மக்களுக்காக உதவும் வகையில் இருப்பதுதான். Maiam ஆப் எப்படி செயல்பட போகிறது, மக்கள் தங்களது பிரச்சனையை எப்படி வெளிப்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon