Primary Menu

Top Menu

September 22, 18

மெர்சல் கொண்டாட்டமாக மாறும் தீபாவளி

இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில்  வெளியாக போகும் பிரம்மாண்ட படம் மெர்சல்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடவுள்ளதாகவும், கபாலி, பாகுபலி 2 படத்திற்கு பின்னர் திரையிடப்படும் தென்னிந்திய திரைப்படம் ‘மெர்சல்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மெர்சல்’ திரைப்படத்தின் டிக்கெட் மிக வேகமாக இந்த திரையரங்கில் புக் ஆகியதை தொடர்ந்து தற்போது இந்த படம் பெரிய ஸ்க்ரீனுக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து கிராண்ட்பிரிக்ஸ் திரையரங்கின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘மெர்சல் படத்திற்கு அதிக டிக்கெட்டுக்கள் புக் ஆகியுள்ளதை தொடர்ந்து பெரிய திரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி பாரீஸ் நேரப்படி இரவு 11.55க்கு ‘மெர்சல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெர்சல் தீபாவளிக்கு வருவதை அடுத்து மற்ற படங்கள் விலகி கொண்டன. இதையடுத்து ஒரு சில படங்கள், மட்டும் தீபாவளிக்கு மெர்சலுடன் மோத உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொடிவீரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில். தற்போது, நடிகர் வைபவ், ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் மேயாத மான் திரைப்படமும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதேசமயம் அரசுடன் வரி பிரச்சனை காரணமாக சினிமா பாதிப்பு அடைந்து வருகிறதனால் கடந்த வாரம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

மெர்சல் படம் வருவதற்குள் பிரச்சனை முடிந்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மெர்சல் படத்துக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று விஷால் தன்னுடைய சண்டக்கோழி பட படப்பிடிப்பை கூட நிறுத்திவிட்டு இதற்காக கடுமையாக வேலை செய்திருக்கிறார் என்பது பாராட்டிற்குரியது.

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon