Primary Menu

Top Menu

September 24, 18

முதன்முறையாக கால்பந்து போட்டியை கண்டு ரசித்த சவூதி பெண்கள் !!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியை நேரில் காண பெண்களுக்கு முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய இளவரசாகப் பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான். அங்கு பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சவூதியில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கும், சினிமா தியேட்டர் திறக்கவும் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கால்பந்து போட்டியை காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜெட்டா நகரில் 300 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை காண சவூதி பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அமருவதற்கு தனி கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக மைதானத்திற்கு வந்த சவூதி பெண்கள் கால்பந்து போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

மேலும் இது குறித்து ஜெட்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், சவுதியின் வரலாற்று முக்கியத்துவமான நாள் இன்று. மற்ற நாடுகளை போல பெண்களுக்கு அளிக்கப்படும் இந்த மாற்றங்கள் பெருமையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Comments

பாலைவனத்தில் அமைக்கப்பட்ட பொழுதுப்போக்கு பூங்கா

சீனாவில் பாலைவனம் ஒன்றில் பல்வேறு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon