Primary Menu

Top Menu

September 25, 18

முகேஷ் அம்பானியின் வெற்றிக்கு இந்த 10 காரணங்கள் தான் !

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தனக்கென்று ஒரு இடத்தையும் இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தையும் பெற்றிருப்பவர் முகேஷ் அம்பானி.
Reliance Industries Limited (RIL) ன் நிர்வாக இயக்குனர் மற்றும் பெரிய பங்குதாரர். 2016 வரை அம்பானி தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஃபோர்ப்ஸ் (Forbes) பட்டியலில் இந்தியாவின் முதல் பணக்காரராக உள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில், முகேஷ் உலகின் மிக சக்திவாய்ந்த மனிதர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 36 வது இடத்தில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

எந்த ஒரு மனிதரின் வெற்றிக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்த வகையில் முகேஷ் அம்பானியின் வெற்றிக்கு பின்வரும் 10 காரணங்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

1. விசாலமான பார்வை, 2. கடினமான தருணத்திலும் திடமாக இருத்தல், 3. மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குதல், 4. ரிஸ்க் எடுத்தல், 5. கனவு காணுதல், 6. வெற்றி மீதான ஆவல், 7. குறிக்கோள், 8. உள்ளுணர்வுகளை நம்புதல், 9. யாரையும் சாராதிருத்தல், 10. செய்யும் காரியத்தை திருந்த செய்தல்.

1.விசாலமான பார்வை

புதிய தொழில் வாய்ப்புகளை தேடுவதிலும் அது சம்பந்தமான சூழலை புரிந்துகொள்ளவும் எப்போதும் தனது கண்களை விசாலமாக திறந்து வைத்திருப்பார்.

2. கடினமான தருணத்திலும் திடமாக இருத்தல்

முகேஷ் அம்பானி தன் தந்தையின் தொழிலில் மிக இளம் வயதில் இணைத்தார். அதுவரை அவர் தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொள்பவராகவே இருந்தார். 1986 ஆம் ஆண்டு அவரின் மாமாவும், அவர்களின் தொழில் பங்குதாரருமான ராசிபாய் இறந்தார். அவர் இறந்து 5 மாதத்திற்குள் திருபாய் அம்பானி (Dhirubhai Ambani) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் முகேஷ் அம்பானி Reliance நிறுவனத்தில் அவர் திருபாய் அம்பானியின் இடத்தில் அமர்ந்தார். அந்த கடினமான தருணத்திலும் திடமாக இருந்து Reliance நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்ற பெருமை இவரையே சேரும்.

3. மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குதல்

தன் நிறுவனத்தின் குழுக்களுடன் இருப்பதோடு நம்பகத் தன்மையுடைய குழுக்களை உருவாக்கவேண்டும். குழுக்களில் உள்ள வல்லுனர்களை நம்ப வேண்டும் என்கிறார்.

4. ரிஸ்க் எடுத்தல்

ஒருவர் சிரமத்தை (risk) மேற்கொள்ளவில்லையோ அவர் வாழ்வில் முக்கிய உயரத்தை தொடமாட்டார் என்று முகேஷ் அம்பானி ஒரு முறை கூறினார். அவர் தனது வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்து அதை நிரூபித்தது காட்டினார். அவர் எடுத்த ரிஸ்க் எல்லாம் கணக்கிடப்பட்ட ரிஸ்க் (calculative risk) ஆகும்.

5. கனவு காணுதல்

நமக்கென்று கனவுகளை கொண்டிருக்கும்போது, அந்த கனவு (dream) நமக்கான முக்கிய இடத்தை பிடிக்க தேவையான வேலைகளை செய்யும் என்கிறார்.

6. வெற்றி மீதான ஆவல்

நமது திட்டமிட்டதை செய்துகொண்டே இருக்கவேண்டும். எக்காரணத்திற்காகவும் எடுத்த காரியத்தை பாதியில் நிறுத்த கூடாது. பொறுமையை இழக்காமல் வெற்றி ஒன்றை மட்டும் குறிகோளாகக்கொண்டு செயல்பட்டால், நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைத்தே தீரும்.

7. குறிக்கோள்

ஒரு நிறுவனத்தை பொறுத்தவரை பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோள் அல்ல, அந்த நிறுவனம் நற்பெயரை சம்பாதிக்க வேண்டும் என்கிறார். அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் நற்பெயரை சம்பாதித்தது.

8. உள்ளுணர்வுகளை நம்புதல்

எப்பொழும் நமது உள்ளுணர்வுகளை நம்ப வேண்டும். அது, நமக்கான எதிர்கால செயல்திட்டங்களையும், நடைமுறையில் இருக்கும் தவறுகளையும்வெளிக்காட்டும்.

9. யாரையும் சாராதிருத்தல்

நம்முடன் இருப்பவர்களை நம்ப வேண்டும். அதேபோல் யாரையும் சார்ந்து தொழிலில் நம்பி, அதை இழந்துவிடக்கூடாது.

10. செய்யும் காரியத்தை திருந்த செய்தல்

முகேஷ் அம்பானி ஊடகத்தில் அதிகம் தோன்றியவர் கிடையாது, பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான தனது எண்ணங்களை World Economic Forum யில் வெளிபடுத்தியதுகூட இல்லை. அம்பானி சமூக வட்டத்தில் அவரின் விளம்பரத்தை குறைவாக இருப்பதையே விரும்புபவர். ஆனால் நாட்டில் அதிகமாக பேசப்பட்ட பிரமுகர்களுள் (personalities) ஒருவர் ஆவார். இதற்கு அவர் செய்யும் காரியங்கள் தான் !

Comments

கல்யாண கனவு

அனைவரும் பூஜாவை அலங்கரிக்க தொடங்கினர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon