Primary Menu

Top Menu

September 21, 18

வைப்ரன்ட் தமிழ்நாடு : வேளாண் மற்றும் உணவுப் பொருள் வர்த்தகப் பொருட்காட்சி

வைப்ரன்ட் தமிழ்நாடு மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக நிகழவிருக்கும்… “அனைத்துலக வேளாண் மற்றும் உணவுப் பொருள் வர்த்தகப் பொருட்காட்சி” இப்பெரும் நிகழ்வினை விளக்க பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

வைப்ரன்ட் தமிழ்நாடு அமைப்பிற்கு க்ரியேட்டிவ் ஹெட் ஆக தலைமை ஏற்றிருக்கும் திரு. ரத்தினவேல் அவர்கள் கூறியதாவது…

“தமிழகத்தில் உற்பத்தியாகும் வேளாண் பொருள் மற்றும் உணவுப் பொருள்களின் உலகளாவிய கண்காட்சி அமைத்து மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் மேலும் உலக அளவில் சந்தைப்படுத்தி இவ்வேளாண் மற்றும் உணவுப் பொருள் வியாபாரத்தை ஏற்றுமதி செய்ய உதவும் நோக்கத்தோடு இக் கண்காட்சி துவங்கப்பட உள்ளது.

30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 180 அரங்குகள் இதுவரை பங்குகொள்ள பதிவு செய்துள்ளன.

இதற்காக EPC (Export Promotion Centre) அமைப்பின் திரு. திருப்பதிராஜன் அவர்கள் உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று இக்கண்காட்சி பற்றி விளக்கிக் கூறி பல ஆர்வமுள்ள வெளிநாடு முதலீட்டார்களை அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

உலக தரத்தில் இக்கண்காட்சி அமைக்க ஏற்பாடு செய்யய்ப்பட்டு வருகிறது. இதற்காக 100 இளைஞர்கள் இவ்வரிய பணியில் தமது சிறப்பான பங்கினை ஆற்றிவருகின்றனர்.

இதன் ஒருங்கிணைப்பாளராக திரு.EKB. குமரேசனார் மற்றும் வைஸ் சேர்மேனாக தொழலதிபர் திரு. JK முத்து அவர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றி தங்களின் மேலான பங்களிப்பினை செலுத்தி வருகின்றனர்.

அகில உலக அளவில் பல வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்திட தயார் நிலையில் உள்ளன.

அனைத்து பத்திரிக்கையாளர்களும் மதுரையில் நிகழவிருக்கும் இந்த பிரம்மாண்ட கண்காட்சி செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்”.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon