Primary Menu

Top Menu

September 26, 18

மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன்

மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான “சீமராஜா” வின் ட்ரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ்க்காக படத்தில் நடித்த சகநடிகர்களுடன் வந்து கலந்துகொண்டார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களைத் தந்த இயக்குனர் பொன்ராம் இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக சமந்தா இந்தப் படத்திற்காக சிலம்பம் பயிற்சி எடுத்து நடித்து இருக்கிறார். நண்பனாக சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரதான பாத்திரத்தில் நடிகை சிம்ரன் களமிறங்கி கலக்கியுள்ளார்.

இசை அமைத்திருக்கும் இமான் அவர்களுக்கு இது 102வது படமென சொன்னவர் தனது தந்தை மதுரைக்காரர் எனப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து கவிஞர் யுகபாரதி பேசும் பொழுது சிவகார்த்திகேயன் படங்களுக்காக இதுவரை 60 பாடல்கள் எழுதியுள்ளதாக மேடையில் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்தப்படம் செப் 13ல் திரைக்கு வரவிருக்கிறது.

Comments

அட்டகாசத்துடன் வெளியானது விஸ்வாசம் படத்தின் ஓபனிங் பாடல்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கான ஓப்பனிங்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon