Primary Menu

Top Menu

September 26, 18

மதுரையில் அமைதியாக நடந்து முடிந்தது – ஆர் எஸ் எஸ் பேரணி !!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர். எஸ். எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் தொடங்கப்பட்டது.

RSS சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி “இந்து” என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர் எஸ் எஸ்) சார்பில் முதன்முதலாக மதுரையில் நடைபெற்ற விஜயதசமி பேரணி அமைதியான முறையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர்களும் மற்றும் பாஜக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதில் திராவிடர் கழகத்தின் சார்பாக சுமார் 6 பேர் நேற்று மதுரை பைபாஸ் சாலையில் பேரணியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டினர். மேலும் பேரணி தொடங்கப்படுவதற்கு முன்னால் போலீசார் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் இதைத் தொடர்ந்து அமைதியாக பேரணி நடைபெற்றது.

இது குறித்துப் பேசிய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் ஆர் எஸ் எஸ் – ஸைத் தலைமையேற்று நடத்தும் ஆர்.வன்னியராஜன், ”தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் முழுமையாக வேர் பரப்பியுள்ளது” என்றார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon