Primary Menu

Top Menu

September 26, 18

மக்களே நினைத்தாலும் 2015 போல இப்போது உதவ முடியாதே !

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பல இடங்களில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையே மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அதில் தாம்பரம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் வீட்டுக்குள் வெள்ளம் சென்று இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இன்னும் ஐந்து நாட்களுக்கு அதிக அளவில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதுவரை எதுவுமே எடுக்கப்படவில்லை.

தற்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களிடம் பணப்புழக்கமும் மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக பொருட்களின் விலையும் அதிகம் ஆகியிருக்கிறது. இது மக்களை இன்னும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏடிஎம்கள் மூடப்பட்டு இருக்கின்றன. மேலும் முக்கால்வாசி ஏடிஎம்கள் சரியான பராமரிப்பு இன்றி வேலை செய்யாமல் இருக்கின்றது. அதையும் மீறி பணம் எடுக்கும் சமயங்களிலும் அதிக அளவு சேவை தொகை வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னையில் வெள்ளம் போன்ற பேரிடர்கள் நடக்கும் சமயங்களில் இன்னும் பல ஏடிஎம்கள் இயங்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவசர தேவைகளுக்கு பணம் எடுப்பது கடினம் ஆகும். மக்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருப்பதால் இது பிரச்சனையை ஏற்படுத்தும்.

சென்னையில் 2015 – ல் நடந்த வெள்ளத்தின் போது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து மக்கள் வந்து உதவி செய்தனர். மேலும் பணத்தை பார்க்காமல் அனைவரும் உதவி புரிந்தனர். ஆனால் ஜிஎஸ்டி, டிமானிடைசேஷனுக்கு பின் மக்கள் அதே போல் அதிக அளவில் உதவுவார்களா என்பது சந்தேகம். களத்தில் வேலையாக செய்ய நிறைய பேர் வந்தாலும், பொருள் உதவி செய்யும் அளவுக்கு அனைவரிடமும் வசதி இருக்கிறதா என்பது தற்போது பெரும் கேள்விக்குறி ஆக தான் இருக்கிறது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon