Primary Menu

Top Menu

September 26, 18

பேனா நிப்பில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேனா நிப் தயாரிப்பை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது.
“கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்கும் ” என்ற பழமொழி உண்டு. ஆனால், நமது கையெழுத்தை தலையெழுத்தாக மாற்றும் பேனா நிப்பை உருவாக்குபவர்களின் நிலைதான் கேள்விக்குறி ???

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மைப் பேனா பயன்படுத்தி வந்தனர். பேனாவில் அதிகம் தேய்மானம் ஆகும் பகுதி அதன் நிப். இதனால், பேனா நிப் தேவை அதிகமாக இருந்தது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மட்டும் 1962-ஆண்டில் 250 க்கும் மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்ததாக ஒரு தகவல். சாத்தூரை சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2,500 தொழிலாளர்கள் இவற்றில் பணி புரிந்து வந்துள்ளனர். தென்னிந்திய அளவில் சாத்தூரில் மட்டுமே நிப் தொழிற்சாலைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷ்யா, முதலான நாடுகளிலிருந்து பேனா நிப் தயாரிப்புத் தொழிலுக்காக மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கப்பட்டன.

கடந்த 1990க்குப் பிறகு குமிழ்முனை (பால்பாயிண்ட்), ஜெல் பேனாக்கள் வருகை அதிகரித்ததனால், மை ஊற்றிப் பயன்படுத்தும் பேனாக்களின் பயன்பாடு குறையத் தொடங்கியது. இதன் விளைவாக நிப் தயாரிப்புத் தொழில் முடங்கத் தொடங்கியது. 250 தொழிற்சாலைகள் இருந்த சாத்தூரில் தற்போது 3 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இதுகுறித்து சாத்தூர் நிப் தொழிற்சாலை உரிமையாளர் ஜி.ராமசாமி கூறுகையில், 1962 இல் இந்த நிப் தொழிற்சாலையைத் தொடங்கினேன். 1990க்குப் பிறகு விற்பனை குறைந்துவிட்டது. மானியவிலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கியதையும் அரசு நிறுத்திவிட்டது. தற்போது மொத்த விற்பனை செய்யும் வடமாநில வியாபாரிகளுக்கு ஒரு நிப் 25 முதல் 30 பைசாவுக்கு விற்பனை செய்கிறோம். அதில் 5 பைசா மட்டுமே லாபம் கிடைக்கிறது. 10 பேர் வேலை செய்தால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 7 ஆயிரம் நிப்புகள் தயாரிக்க முடியும். இதனால் கூலி குறைவாகவே வழங்க முடிகிறதனால் பலர் மாற்று வேலையைத் தேடி சென்று விட்டனர்.

வேலைக்கு தொழிலாளர் கிடைக்காததால் 10 பேர் செய்ய வேண்டிய வேலையை 4 பேர் செய்யும் நிலையுள்ளதனால், நிப் உற்பத்தி தொழில் குறைந்து விட்டது. அரசு மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கி, பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் மை பேனாவை பயன்படுத்த வேண்டும் அரசு உத்தரவிட்டால் மட்டுமே மீண்டும் இந்தத் தொழில் உயிர்பெறும் என்றார்.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon