Primary Menu

Top Menu

September 23, 18

பில்லியனர்கள் அதிகம் படிக்க விரும்பும் புத்தகங்கள் !

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் அந்நாட்டின் அரசு ஆள்கிறது என்று சொல்வதை விட, அங்குள்ள பில்லியனர்கள் ஆள்கிறார்கள் என்று சொல்வதுதான் நிதர்சனம். ஏனெனில் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் புண்ணியவான்கள் பில்லியனர்கள்.
இந்த பில்லியனர்கள் வாழ்வில் பல தோல்விகளை வெற்றிகளாக மாற்றி முன்னேற்றம் கண்டு, உலக பிரபலமானவர்கள். ஆனால், இனிமேல் தங்களது வாழ்க்கையில் தோல்விகளை குறைத்துக்கொள்வதில் மிகவும் கவனமாகவும் இருப்பார்கள்.

இவர்களது வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவைகளுல் புத்தகங்களும் ஒன்று … அந்தவகையில் உலகின் நட்சத்திர பில்லியனர்கள் விரும்பி படிக்கும் புத்தகங்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், இந்த நூற்றாண்டின் மிகவும் முக்கியமான தொழிலதிபர். ஜான் புரோக்ஸ் எழுதிய BUSINESS ADVENTURES அவருக்கு பிடித்த புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தை வாரன் பஃபெட் அவருக்கு பரிந்துரைத்தார். மேலும் JD SALINGER எழுதிய THE CATCHER IN THE RYE என்ற புத்தகமும் அவருடைய கண்டிப்பாக படிக்க வேண்டிய பட்டியலில் உள்ளது.

பேஸ்புக்கை தொடங்கிய மார்க் ஜுக்கர்பெர்க், உலகின் மிக இளம் வயது கோடிஸ்வரர். MOISES NAIM’S எழுதிய THE END OF POWER என்ற புத்தகம் அவர் தேர்தெடுத்து புத்தகம் ஆகும். 2010 ஆம் ஆண்டு NEW YORKER இதழில் VIRGIL எழுதிய THE AENEID என்ற புத்தகம் தனக்கு பிடித்த புத்தகம் என குறிப்பிட்டிருந்தார். அவர் பள்ளியில் படிக்கும் போது முதன்முதலாக அந்த புத்தகத்தை படித்தார்.

தொழில்நுட்பத்துறையின் பிதா மகன் என புகழப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கியவர். இந்நிறுவனம் இன்று தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ளது. உலகம் அவரின் வாழ்க்கை பாடத்திலிருந்து அதிகபட்ச ஊக்கத்தை பெற்றது. AYN RAND’S எழுதிய ATLAS SHRUGGED, GEORGE ORWELL’S எழுதிய 1984, HERMAN MELVILLE’S எழுதிய MOBY DICK ஆகிய புத்தகங்கள் பிடித்த புத்தகங்கள் ஆகும்.அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், இவர் APPLE நிறுவன ஊழியருக்கு JR. GEORGE STALK எழுதிய COMPETING AGAINST TIME என்ற புத்தகத்தை படிக்க அடிக்கடி பரிந்துரைப்பார்.

E- COMMERCE சந்தையில் உலகின் முதன்மையான நிறுவனமாக செயல்படும் AMAZON நிறுவனத்தை தொடங்கியவர் JEFF BEZOS. ஜெப் பெசாஸின் சொத்து மதிப்பு $59.2 பில்லியன் டாலர். FORBES நாளிதழின் 2016-ஆம் ஆண்டு உலகின் பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

JIM COLLINS மற்றும் JERRY PORRAS எழுதிய BUILT TO LAST: SUCCESSFUL HABITS OF VISIONARY COMPANIES என்ற புத்தகத்தை தொழிலுக்காக BEZOS பரிந்துரைத்தார். THE REMAINS OF THE DAY என்ற புத்தகம் KAZUO ISHIGURO’S வெளியிட்ட மூன்றாவது நாவலாகும். இந்த புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்த புத்தகம் என 2009 NEWS WEEK-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். சுந்தர் பிச்சை உலகின் மிகப் பெரிய நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரி. GAME OF THRONES கற்பனை நாடகம் மற்றும் SCIENCE FICTION சார்ந்த புத்தகங்களின் ரசிகர் ஆவார்.

உணவு மற்றும் குளிர்பானங்கள் தொழிலில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள PEPSI CO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி ஆவார். FORBES இதழின் உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களில் முதல் 20 இடத்திற்குள் இடம்பெறுபவர்.

DAVID BROOKS எழுதிய THE ROAD TO CHARACTER என்ற புத்தகம் தனக்கு பிடித்த புத்தகம் என்று FORTUNE இதழுக்கு தெரிவித்தார். GARY BURNISON எழுதிய NO FEAR OF FAILURE புத்தகத்திலிருந்து எப்படி நிர்வாகியாகுவதை கற்றுக்கொண்டதாக FAST COMPANY இணைத்தள பேட்டியில் தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான MICROSOFT-ன் தலைமை செயல் அதிகாரி SATYA NADELLA. அவர் தனக்கு பிடித்த புத்தகமாக தேர்ந்தெடுத்தது MICHAEL HARRIS-ன் THE END OF ABSENCE : RECLAIMING WHAT WE’VE LOST IN A WORLD OF CONSTANT CONNECTION, JUDY WAJCMANவுடைய PRESSED FOR TIME : THE ACCELERATION OF LIFE IN DIGITAL CAPITALISM புத்தகம், DANIEL J.LEVITIN எழுதிய THE ORGANISED MIND : THINKING STRAIGHT IN THE AGE OF INFORMATION OVERLOAD புத்தகம் ஆகும். எலன் மஷ்க் PAY PAL நிறுவனத்தை தொடங்கியவர். TESLA MOTORS மற்றும் SPACEX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, SOLARCITY நிறுவனத்தின் தலைவர், OPEN AI நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார்.

Comments

நமது விருந்தோம்பல்

இந்தியாவெங்கும் தொடர்ச்சியாகப் பயணம்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon