Primary Menu

Top Menu

September 22, 18

பிலிப்பைன்சில் சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்தது ; 11 இந்தியர்களை காணவில்லை !!

ஹாங்காங் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் நேற்று அதிகாலை மூழ்கியது.

இதில் 26 இந்தியர்கள் பணியாற்றினர். இதன் மூலம் பணியாற்றிய 15 இந்தியர்களை ஜப்பானிய கடலோர காவல் படையினர் மீட்டனர். அதே கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. கடலில் திடீரென சூறாவளி காற்று வீசியதில், கப்பல் சேதமடைந்து மூழ்கியது.

இது குறித்து ஜப்பான் கடற்படைக்கு தகவல் தெரியவந்ததும், மீட்பு பணிக்காக 2 ஜப்பானிய கப்பல்கள் மற்றும் 3 விமானங்களை அங்கு அனுப்பிவைத்தது. எனினும் சரக்கு கப்பல் மூழ்கிய பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஜப்பானிய கடலோர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments

தீவுப்பகுதியில் குடியேற்றப்படும் 1 லட்சம் ரோஹிங்கியாக்கள்

மியான்மரை ஒட்டியுள்ள வங்கதேச பகுதியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon