Primary Menu

Top Menu

September 26, 18

பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு 'சாஹோ' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

பாகுபலி நாயகன் பிரபாஸின், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட “சாஹோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அவரது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 23) வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூகவலைத்தளத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் பிரபாஸ்க்கு தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள். “பாகுபலி 2” படத்தைத் தொடர்ந்து “சாஹோ” படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது

பிரபாஸின் முகம் மறைந்திருக்கும் ஒரு மிதமான இரவுப் பயணத்தில், இறுக்கமாக பிரபாஸ் நடந்து செல்வது மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கே படத்தின் ஜானரைச் சொல்லிவிடுகிறது. இது ஒரு பக்கா ஆக்சன் ஆக்ஷன் க்ரைம் படம். இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சுஜீத் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது.

பாகுபலி” படத்தைப் போலவே, இப்படமும் பெரும் பொருட்செலவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

தேவர் மகன்–2 படத்தை இயக்க கமல்ஹாசன் முடிவு?

நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon