Primary Menu

Top Menu

July 20, 18

பிரதமரின் உறுதிமொழிக்கு வலுசேர்த்த இலங்கை வர்த்தக பயணம்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக, தலைவர் திரு.N.ஜெகதீசன் அவர்கள் தலைமையில் முதுநிலைத்தலைவர் திரு.S.இரத்தினவேல் அவர்களின் வழிகாட்டுதலுடன் 55 பேர் கொண்ட வர்த்தக தூதுக் குழுவினர் கிழக்கு மாகாண தொழில் வணிக வாய்ப்புகளை கண்டறியவும் ஜப்னா சர்வதேச வர்த்தக பொருட்காட்சியில் பங்கு பெறும் பொருட்டு 27.01.2016 அன்று மதுரையிலிருந்து இலங்கை சென்றனர்.

முன்னதாக நமது வர்த்தக குழுவினருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் மாண்புமிகு நசீர் அகமது அவர்கள், “கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்யுங்கள்” என்கிற மாநாட்டில் கலந்துகொள்ளும்படியும் வடக்கு மாகாண முதலமைச்சர் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், சர்வதேச யாழ் வர்த்தக பொருட்காட்சி 2016ல் கலந்துகொள்ளும் படியும் அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி 28.01.2016 அன்று கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்யுங்கள் என்ற சர்வதேச முதலீட்டு மாநாட்டில் நமது வர்த்தகத் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.
தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் தமிழகத்திலிருந்து இருதரப்பு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக வாய்ப்புகள், தொழில்துறையில் கூட்டு முதலீட்டிற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து இரண்டு மாகாண முதலமைச்சர்கள், அங்குள்ள தொழில் வணிகத்துறையினர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் நமது வர்த்தக தூதுக்குழுவினர் விவாதம் நடத்தினர்.

29.01.2016 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உணவு பதனிடல், ஜவுளி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த தொழில்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. எனவே தமிழகத்தில் இருந்து தொழிலதிபர்கள் வடக்கு மாகாணத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். அவ்வாறு வரும் தொழிலதிபர்களுக்கு அனைத்து சலுகைகளும், உதவிகளும் அளிக்கப்படும் என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் அவர்கள் உறுதி அளித்தார். மேலும் இந்தியாவின் தூதரக அதிகாரி திரு.A.நடராஜன் அவர்களும் செயற்குழு கூட்டத்தில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதையடுத்து யாழ் சர்வதேச வர்த்தக பொருட்காட்சியை (2016) நமது வர்த்தக குழுவினர் பார்வையிட்டதுடன் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொழில் வணிக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த, 15.09.2015 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போது கட்டமைப்புகள், இரயில்வே, எரிசக்தி, வேளாண்மை, சமூக வளர்ச்சி திட்டங்கள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், வானவியல், சிவில் அணுசக்தித்துறை போன்றவற்றில் இலங்கையுடனான உறவுகள் மேலும் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று இலங்கை பிரதமர் திரு.விக்ரமசிங்கேயிடம் அளித்த உறுதிமொழிக்கு வலுசேர்க்கும் வகையில் நமது வர்த்தககுழுவினரின் இலங்கை பயணம் அமைந்தது சிறப்பிற்குரியது ஆகும்.

லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி

கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது...

Leave a Reply