Primary Menu

Top Menu

September 24, 18

பாகுபலியை மிரட்டும் படமாக பத்மாவதி பட டிரைலர் !!

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது ‘பத்மாவதி‘ திரைப்படம். ராணி பத்மினியாக தீபிகா படுகோனே, சாகித் கபூர், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.

பாகுபலி‘ போல பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘பத்மாவதி‘ திரைப்படத்தின் டிரெய்லர் இரண்டு நாள் முன்பு வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ட்ரைலரை you tube – ல் ஒரே நாளில் 15 மில்லியன் (1.5 கோடி) பேர் பார்த்துள்ளனர். பாகுபலி இயக்குநர் ராஜமௌலி உட்பட பல்வேறு பிரபலங்கள் பத்மாவதி படத்தின் பிரமாண்டம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.

பாலிவுட் வரலாற்றில் 24 மணி நேரத்தில் இதுவே அதிகபட்சம் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தகைய வரவேற்பிற்கு நடிகர் ரன்வீர் சிங் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் எனவும், படம் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments

சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon