Primary Menu

Top Menu

September 25, 18

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் : பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் பலி

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. முன்னதாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில், எல்லை பகுதியில், பாகிஸ்தான் படையினர், அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடி தாக்குதலில், 3  பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இத்தாக்குதலை பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடியாக நுழைந்து இந்திய ராணுவத்தினர் நடத்தியதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இது இந்திய ராணுவத்தினர் நடத்திய மற்றொரு சர்ஜிகல் ஸ்டிரைக்காக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது. இந்த தாக்குதலில் முகாம்கள் அழிக்கப்பட்டன; 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon