Primary Menu

Top Menu

September 25, 18

பனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த பெண் பத்திரிகையாளர் குண்டு வெடிப்பில் பலி !!

தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டா. பனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தவர்களில் முக்கிய நபராகக் கருதப்படும் மால்டா நாட்டைச் சேர்ந்த பெண் நிருபர் தப்னே கருவானா கலிஜியா கார் குண்டு வெடித்துப் பலியானார்.

பனாமா நாட்டில் உள்ள புகழ் பெற்ற ‘மொசாக் பொன்சேகா’ சட்ட நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். மேலும் இதற்குரிய ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது.

இதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிக்கினர். அவர்களில் நவாஸ் செரீப் பிரதமர் பதவியை இழந்தார். தற்போது அவரும், குடும்பத்தினரும் ஊழல் வழக்கு விசாரணையில் சிக்கி தவிக்கின்றனர்.

53 வயதான இந்தப் பதிவர் பிட்நிஜா என்னும் இடத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அவர் ஓட்டிச் சென்ற கார் வெடித்துள்ளது. வெடிச்சத்தம் கேட்டு அவரது மகன் ஒருவர் ஓடிச் சென்று பார்த்துள்ளார். முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் புகார் செய்து இருந்தார். மேலும் தனக்கு வந்த மிரட்டல் கடிதத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருந்தார்.

அரசியல்வாதிகளின் ஊழல் குறித்து தனது வலைப்பக்கத்தில் விலாவாரியாக எழுதி வந்தார். பனாமா கேட் ஊழலில் சிக்கியுள்ள மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் பதவி தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் பெண் நிருபர் கலிஜியா படுகொலைக்கு டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். இது மிகவும் கொடூரமானது என கூறியுள்ளனர்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon