Primary Menu

Top Menu

September 25, 18

பந்தாவை விரும்பாத நாட்டில் தொழில் வாய்ப்பு

உலகத்திலேயே அதிக நிலப்பரப்பு கொண்டுள்ள நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்து இரண்டாம் இடம் பிடிப்பது கனடா. சுமார் ஒரு கோடி கிலோ மீட்டர்கள். இன்னும் பல பிரம்மாண்டங்களும் கனடாவில் உண்டு. ஆன்ட்டேரியோ நகரத்தில் இருக்கும் யோங்கே தெரு (Yonge Street) 2000 கிலோ மீட்டர் நீளமானது, உலகிலேயே மிகப் பெரியது. மிகப் பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா இருப்பதும் கனடாவில்தான்.

சரி இங்கு எவ்வாறு வணிகம் செய்வது என்பதை அறிவதற்கு முன்பாக, கனடாவின் பொருளாதாரம் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

 

கனடிய பொருளாதாரம்

 

தொழில் நுட்பமும், பொருளாதார வளர்ச்சியும் கொண்ட நாடு. அமெரிக்கா பக்கத்தில் இருப்பதும், அவர்களோடு கையெழுத்திடப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களும் இதற்கு முக்கிய காரணம். பொருளாதாரத்தில் சேவைத்துறையின் பங்கு 70 சதவீதம்.

சங்கிலித் தொடராக இருக்கும் வால்மார்ட் போன்ற சில்லரை வியாபாரக் கடைகள், நிதி நிறுவனங்கள், கட்டுமானம் ஆகியவை இந்த 70 சதவீதத்தில் இடம் பிடிக்கின்றன. தொழில் துறையின் பங்கு 29 சதவீதம். பெட்ரோலியம், உலோகத் தாதுப் பொருட்கள், யுரேனியம், மரம், கெமிக்கல்கள், போக்குவரத்து வாகனங்கள், விமானங்கள் தயாரிப்பு போன்றவை முக்கிய தொழில்கள். விவசாயம் பொருளாதாரத்தில் ஒரு சதவீதப் பங்கு மட்டுமே வகிக்கிறது.
இந்தியாவோடு வியாபாரம்
கனடியன் டாலர் இந்தியா மதிப்பிற்கு சுமார் 47 ரூபாய் 50 காசு ஆகும். நமது ஏற்றுமதி ரூ. 13,431 கோடி. இவற்றுள் முக்கியமானவை இரும்பு உருக்குப் பொருட்கள், கெமிக்கல்கள், மருந்துகள், ஆயத்த ஆடைகள், ரப்பர் ஆகியவை. நம் இறக்குமதி ரூ. 22,966 கோடிகள். காய்கறிகள், பெட்ரோலியம், உலோகத் தாதுக்கள், உரங்கள், காகிதம், மரக்கூழ் போன்றவை இடம் பிடிக்கின்றன.

 

விசிட்

 

நவம்பர் முதல் ஏப்ரல் வரை கடும் குளிர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலம். தமிழ்நாட்டுக்காரர்களுக்கு மிகச் சிறந்தது. ஆனால், கோடையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிக மாக இருக்கும்.

 

பிசினஸ் டிப்ஸ்

 

மக்கள் தொகையில் 16 சதவீதம் இருக்கும் பிரெஞ்சுக்காரர்கள் பெரும்பாலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பதில்லை. பிறர் நேரத்துக்கு வருவார்கள். இந்தப் பின்புலங்களை ஆராய்ச்சி செய்யாமல் நாம் சந்திப்புக்குக் குறிப்பிட்ட நேரத்தில் போய் விடுவது நல்லது. விசிட்டிங் கார்டுகள் அவசியம். இவை ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறுபக்கம் பிரெஞ்சு மொழியிலும் இருப்பது நல்லது.

கை குலுக்கல் அழுத்தமாக இருக்கும். நேர்மையானவர்கள். நம்மிடமும் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். நம் கண்களைப் பார்த்தபடி பேசுவார்கள்.
மிக நெருங்கி நின்றுகொண்டு பேசுவது பிடிக்காதவர்கள். சாதாரணமாக, இரண்டடி இடைவெளி வைத்துக்கொண்டு பேசுவது வழக்கம். நாமும் இதைப் பின்பற்றவேண்டும்.
தூரத்தில் இருக்கும் யாரையாவது அழைக்கவேண்டுமானால், ஒற்றை விரலால் சுட்டிக்காட்டிக் கூப்பிடக் கூடாது. ஐந்து விரல்களையும் நிமிர்த்தி, உள்ளங்கையைத் தூக்கி அழைக்க வேண்டும்.

 

உடைகள்

 

இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் சூட் அணிவதுண்டு. பிறர் அமெரிக்கப் பாதிப்பால், காஷுவல் உடைகள் அணிவார்கள். நாம் பிசினஸ் மீட்டிங்களுக்கு பாண்ட், முழுக்கை சட்டை அணிவது நல்லது.

 

பரிசுகள் தருதல்

 

விலை உயர்ந்த பரிசுகள் தரக்கூடாது. கனடியர்கள் ஆடம்பரத்தையும், பந்தாவையும் விரும்புவதில்லை. வெளிநாட்டினர் வரும்போது, அவர்கள் நாட்டுப் பொருட்களைப்
பெற விரும்புவார்கள்.

Comments

கல்யாண கனவு

அனைவரும் பூஜாவை அலங்கரிக்க தொடங்கினர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon