Primary Menu

Top Menu

September 22, 18

நவ.7-ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் – கமல்ஹாசன் !!

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்த கேள்வி மற்றும் பல்வேற கருத்துக்களும் நிலவி வருகிறது. ஆனாலும் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் நான் எப்பொழுதே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும், மேலும் அரசியல் விமர்சனங்களை இணையதளத்தில் வெளியிட்டும் வருகிறார்.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. மேலும் தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாகவே விமர்சனம் செய்து வருகிறார்.
மேலும் ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் அனைத்தும் தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது மற்றும் கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் நவம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இம்முறை ரசிகர்களை அதிகமாக திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும், அதில் அரசியல் பிரவேசத்தையும், கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது, நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்பதாகவும், பல்வேறு இயக்கங்கள் தம்முடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும், தேவையும் தனக்கு வந்துவிட்டதாகவும், மேலும் செய்வார்கள் என காத்திருந்தது போதும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், நம்மால் முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். செயல் திட்டங்களை தீட்ட, இனியும் தாமதிக்காமல் கூடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon