Primary Menu

Top Menu

September 22, 18

நம் வாழ்க்கைக்கு உதவும் X-கதிர்கள்

எக்ஸ் கதிர்கள் (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) 1895ம் ஆண்டு எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்களான இவை, இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும் . இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரிவீச்சி என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.

காந்த,மின் புலங்களால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது.

மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், வானூர்தி தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன. இப்பண்பே அவைகள் நோயறி கதிரியலில் (Diagnostic Radiology) கதிர்ப்படம் எடுக்கப் பயன்படுகிறது.

இக்கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பண்பு அவைகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும். இம்முறை கதிர் மருத்துவம் (Radiation therapy) எனப்படும்.
மேலும் கேட்மியம் சல்பைடு (CdS), சிங்கேட்மியம் சல்பைடு (ZnCdS), போன்ற சில பொருட்களில் விழும்போது உடனொளிர்தலைத் (Fluorescence) தோற்றுவிக்கின்றன. இப்பண்பே எக்ஸ் கதிர்களைக் கண்டுகொள்ள உதவியது. மேலும் உடனொளிர் திரையிலும்( fluorescent Sreen) வலுவூட்டும் திரையிலும் ( Intensifying Sreen) பயன்படக் காரணமாகும். படிக இயல் ஆய்விலும் தொழில் துறையிலும் பெரிதும் பயன்பாட்டிலுள்ளன. எக்சு கதிர்கள், சாதாரண ஒளி அலைகளைப்போல் அதே திசைவேகத்துடன் பயணிக்கின்றன. ஓளிஅலைகளின் பண்புகள் யாவும் இதற்கும் பொருந்தும்.

எக்ஸ்- கதிர்கள் என அழைக்கப்படும் ராண்ஜன் கதிர்கள் (Roentgen rays) 1895 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்சுபெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லெம் இராண்ஜன், குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆய்ந்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக, அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சையனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதைக் கண்ணுற்றார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும் இல்லாத போது ஒளிராமலும் இருக்கக் கண்டார். இதற்கு குழாயின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் எனக் கருதினார். இக்கதிர்களை அவர் எக்ஸ்-கதிர்கள் என அழைத்தார்.

எக்ஸ்-கதிர்கள் மற்றும் காம்மா கதிர்களுக்கு இடையே ஒரு வரையறை வேறுபடுத்தி உலகளவில் ஒருமித்த கருத்து இல்லை. அவற்றின் மூலத்தை வைத்துக்கொண்டே இக் கதிர்வீச்சுக்களை இருவகையாக வேறுபடுத்துகின்றனர். எக்சு கதிர்கள் இலத்திரன்களில் இருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன, ஆனால் காம்மா கதிர்கள் அணுக்கருவிலிருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன. மற்றச் செயல்முறைகளின் மூலம் இந்த உயர் ஆற்றலை உருவாக்க முடிவதாலும் சில வேளைகளில் அது உருவாக்கப்படும் முறை தெரியாமல் போவதாலும் இந்த வரையறையில் சிக்கல்கள் உள்ளன. ஒரு பொதுவான மாற்றீடாக அலைநீளத்தின் அடிப்படையில் எக்சு-கதிர் மற்றும் காம்மாக் கதிர்வீச்சுக்கள் வேறுபடுத்தப்படுகின்றன. 10−11 m அலைநீளத்தைக் கொண்ட கதிர்வீச்சு காம்மாக் கதிர்கள் எனப்படுகின்றது.

மருத்துவப் பயன்கள்

வில்லெம் இராண்ஜன் கண்டுபிடித்ததிலிருந்து எக்ஸ்-கதிர்கள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன. மருத்துவப் படிமவியலில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் முதலாவது மருத்துவப் பயன்பாடானது அவரது கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தது. 2010 இல் உலகளாவிய ரீதியில் 5 பில்லியன் மருத்துவப் படிமவியல் கற்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

வேறு பயன்பாடுகள்

 

பளிங்குகளூடாக X-கதிர்கள் செலுத்தப்பட்டு அதில் தெறிப்படையும் X-கதிர்களின் தெறிப்படையும் அமைப்பைக் கொண்டு பளிங்கின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு கண்டறியப்படும்.

X-கதிர் வானியலில் தொலைதூர வான் பொருட்களிலிருந்து வரும் X-கதிர்கள் விசேட தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி ஆராயப்படுகின்றன.

மென்மையான X-கதிர்களைப் பயன்படுத்தித் தெளிவான நுணுக்குக் காட்டி படங்களை எடுக்கலாம்.

X-கதிர் உடனொளிர்வானது சில பொருட்களின் கூறுகளை ஆராயப் பயன்படுகின்றது. X-கதிர் வடிவில் சக்தி உட்செலுத்தப்பட்டு, வெளிவரும் கட்புலனாகும் ஒளியின் சக்தியை அளவிடுவதன் மூலம் மாதிரிப் பொருளின் கூறுகளைக் கண்டறியலாம்.

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவியில் (CT scanner) பிரதான ஊடுருவும் மின்காந்த அலையாக உள்ளது.

விமான நிலையங்களில் பொருட்களைச் சோதனையிடப் பயன்படுகின்றது.

பொருட்களைக் காவும் பெரிய வாகனங்களின் உள்ளடக்கத்தைச் சோதனையிடப் பயன்படுகின்றது.

Comments

4 கால்களுடன் பிறந்த குழந்தை – காரணம் என்ன?

செப்டம்பர் 15ஆம் நாளன்று கோரக்பூரின்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon