Primary Menu

Top Menu

September 20, 18

'நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்களா..?' கமலை சீண்டிய வெங்கட் பிரபு !!

வெங்கட்பிரபு தயாரிப்பில் வைபவ், சம்பத், சனா அல்தாஃப், இனிகோ பிரபாகர் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.கே நகர்’. இந்தப் படத்தை சரவண ராஜன் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

‘ஆர்.கே.நகர்’ படத்தின் டீசரில் “நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா?” என்ற வசனம் மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை பெயர் குறிப்பிடாமல் கலாய்க்கும் விதத்தில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

‘ஆர்.கே.நகர்’ படத்தில் சர்ச்சையைக் கிளப்பும்படியான அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் இதுபற்றி கயல் பட நடிகர் சந்திரன் தன்னுடைய ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். ‘உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை’ என அவர் வெங்கட்பிரபுவிடம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கமல்ஹாசனுக்கு வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதையும் விமர்சித்துள்ளார். ‘ஒரு பக்கம் RK நகர் டீசர், அதை சரிக்கட்ட பிறந்தநாள் வாழ்த்தா?’ என சந்திரன் கேட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon