Primary Menu

Top Menu

September 25, 18

தேனியில் நிகழ்ந்த இலக்கிய விழா!!

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை நிகழ்த்திய ஐம்பெரும் விழா தேனியில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.

தமிழ்கூர் நல்லார்வலர்கள், இலக்கிய ஆளுமைகள், நூலாசிரியர்கள், வாசகர்கள் என தேனியைச் சார்ந்தோர் மட்டுமின்றி சென்னை மதுரை போன்ற பெருநகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1. ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, 2. இரண்டாம் ஆண்டு க.சீ.சிவகுமார் நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா, 3. 2ம் ஆண்டு வாசிப்பு இயக்கத்தில் கலந்து கொண்டோரை கௌரவித்தல், 4. புதிய நூல்களை வெளியிடுதல், 5. க.இ.மேடையின் 150 நிகழ்வுகளின் கொண்டாட்டம் என இந்தக் கலை இலக்கிய மேடையின் 5ம் பெரும் விழா பெரும் திரளான இலக்கியவாதிகளின் பங்களிப்புடன் களைகட்டியது.

இவ்விழாவினை முன்னேற்பாடு செய்த இலக்கிய ஆர்வலர் திரு.விசாகன், விழா அரங்கவசதி, சிற்றுண்டி, மதியஉணவு என அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புடன் செய்திருந்தார்.

திரு.விசாகன் எழுதிய தேனிநகர் அரசியல் – வெல்லும் தனிநபர் பாத்திரம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இலக்கிய ஆளுமைகள் முன்னிலையில் வெளியிப்பட்டது.

மா.இல.தங்கப்பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பங்கேற்ற பல்வேறு மனீதர்களின் நேர்காணலுடன் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டு ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது.

Comments

அறுபதாம் வயதில் அறுபது பனைவிதை நடவு !

மதுரையில் பனைமர விதைகள் நட்டு வைத்து...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon