Primary Menu

Top Menu

September 22, 18

தென் ஆப்ரிக்காவில் வர்த்தக வாய்ப்புகள்

உலகில் வைர, தங்கச்சுரங்கத் தொழில்களில் தென் ஆப்பிரிக்கா ஒரு முன்னணி நாடாக இருக்கிறது. இந்தத் தொழில்களோடு இந்தியாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. தென் ஆப்பிரிக்க வைரங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுப் பட்டை தீட்டப்படுகின்றன. நாம் அவர்களிடமிருந்து வாங்கும் பொருட்களில், தங்கத்தின் பங்கு சுமார் 33 சதவீதம் ஆகும்.

 

பொருளாதாரம்

 

பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 68 சதவீகிதம் ஆகும். சுற்றுலா, நிதி, வங்கிச் சேவைகள் ஆகியவை இந்தப் பங்களிப்பைத் தருகின்றன. தொழில் துறையின் பங்கு 30 சதவீதம். சுரங்கத் தொழில், இரும்பு உருக்கு தயாரிப்பு, கப்பல்கள் பழுது பார்த்தல், இயந்திரங்கள், கார்கள், உரங்கள், உணவுவகைகள் உற்பத்தி ஆகியவை முக்கியமானவை. தென் ஆப்ரிக்கா நாணயமான ராண்ட் (Rand) மதிப்பு, இந்திய மதிப்பில் 4 ரூபாய் 23 காசுகளுக்குச் சமம் ஆகும்.

 

இந்தியாவோடு வியாபாரம்

 

நிறவெறி இருந்தவரை தென் ஆப்பிரிக்காவோடு வர்த்தக உறவுகளைத் துண்டித்திருந்த இந்தியா, 1994 இல், அங்கே ஜனநாயகமும், சமத்துவமும் மலர்ந்தபின் தான், வியாபாரம் தொடங்கியது. இந்தியாவின் ஏற்றுமதி ரூ.32,348 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை பெட்ரோலியப் பொருட்கள், மருந்துகள், கார்கள், அணு உலைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக்ஸ்.
நம் இறக்குமதி ரூ.39,741 கோடிகள். கரி, தங்கம், வைரங்கள், இரும்பு, உருக்கு, அலுமினியம், உலோகத் தாதுக்கள், மரக்கூழ், கம்பளி போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.

டாடா குழுமம் (தாஜ் ஹோட்டல்கள், டி.சி.எஸ்), மஹிந்திரா (கார்கள்), ரன்பாக்ஸி, சிப்லா (மருந்துகள்) ஆகிய இந்திய நிறுவனங்கள் தென் ஆப்பிரிக்காவில் தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார்கள். இதேபோல், சாப் மில்லர் (பீர் தயாரிப்பு), அல்டெக் (செட்டாப் பாக்ஸ்), ஆட்காக் இன்கிராம் (மருந்துகள்) போன்ற பல தென் ஆப்பிரிக்கத் தொழில் நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் பொருட்களைத் தயாரிக்கிறார்கள்.

 

தென்.ஆப்ரிக்காவில் வர்த்தகம் செய்ய சில ஆலோசனைகள்

 

அந்நாட்டை பொறுத்தவரை நேரம் தவறாமை மிக முக்கியம். முன்னரே நேரம் குறித்தால் மட்டுமே, முக்கியமானவர்களைச் சந்திக்க முடியும். விசிட்டிங் கார்டுகள் அவசியம். ஆனால், பரிமாறிக்கொள்ளும் பாரம்பரியம் கிடையாது. நீங்கள் கார்டு கொடுத்தால், அவர்கள் பதிலுக்குத் தராமலேயே இருக்கலாம்.

சந்திக்கும் பிசினஸ்மேன்களின் பின்புலத்துக்கு ஏற்ப, அவர்கள் தொழில் கலாச்சாரம் வேறுபடும். வெள்ளையர்கள் அவசரம் காட்டமாட்டார்கள். நிதானமாக முடிவெடுப்பார்கள். நாம் அவசரம் காட்டினால், பேச்சு வார்த்தைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.
இந்திய, சீன பிசினஸ்மேன்கள் சாமர்த்தியசாலிகள். திறமையாகப் பேரம் பேசுவார்கள். ஆப்பிரிக்க பிசினஸ்மேன்கள் அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், எல்லோரும் நேர்மையானவர்கள். உள்ளூர் அரசியல், முன்பு நிலவிய நிறவெறிப் பிரச்சினைகள் பற்றிப் பேச அவர்கள் விரும்புவதில்லை. ஆகவே, இந்தச் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். விளையாட்டுப் பிரியர்கள், சாப்பாட்டு ரசிகர்கள். ஆகவே, ரக்பி, கிரிக்கெட், கோல்ஃப், உணவு ஆகியவைபற்றிப் பேசலாம்.

 

உடைகள்

 

ஜோகன்னஸ்பர்க் நகரில் மட்டும் பான்ட், ஷர்ட், டையும், சில அலுவலகங் களில் கோட்டும் தேவை. பிற நகரங்களில் பான்ட், முழு கை சட்டை போதும்.

 

பரிசுகள் தருதல்

 

முதல் சந்திப்பில் பரிசுகள் தருவதை அவர்கள் விரும்புவதில்லை. ஓரளவு தொடர்பு ஏற்பட்டபின் தரலாம். பரிசு தரும்போது, மூன்று முறை மறுப்பது அவர்கள் வழக்கம். ஆகவே, நான்கு முறை வற்புறுத்துங்கள். வாங்கிக்கொள்வார்கள்.

 

விசிட்

 

மே முதல் ஜூலை வரை குளிர்காலம். ஆனால், தாங்கும் குளிர்தான். பிற மாதங்களில் வெயில்.
அதிக மழையும் கிடையாது.

Comments

4 கால்களுடன் பிறந்த குழந்தை – காரணம் என்ன?

செப்டம்பர் 15ஆம் நாளன்று கோரக்பூரின்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon