Primary Menu

Top Menu

September 24, 18

திருமணமான முதலிரவிலே மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவன் !!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், கங்காதரநெல்லூரை சேர்ந்தவர் சைலஜா. எம்பிபிஎஸ் படித்துள்ளார். இவருக்கும் வி.கோட்டாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வரும் மேதரங்கபல்லியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்று காலை காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இதையடுத்து முதலிரவு அறைக்குள் சைலஜா சென்றார். கணவர் ராஜேஷ் உள்ளே இருந்துள்ளார். ஒரு சில நிமிடங்களில் பதற்றத்துடன் சைலஜா வெளியே ஓடி வந்தனர். பின்னர் அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

மீண்டும் சிறிது நேரத்தில் சைலஜா ரத்தக்காயத்துடன் வெளியே வந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் என்ன நடந்தது என அறியாமல் குழம்பினர். பின்பு உடனடியாக சைலஜாவை சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுபற்றி சைலஜா கூறியதாக உறவினர்கள் தெரிவித்ததாவது: அறைக்குள் சென்றபோது திடீரென ராஜேஷ், சைலாஜாவின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார் என்பதும் பின்னர் பிளேடால் சரமாரி வெட்டியுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து சைலஜாவின் பெற்றோர் ஜி.டி.நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூ.60 லட்சம் வரை செலவு செய்து திருமணம் நடந்த நிலையில் தனது மகள் வாழ்க்கையை சீரழித்த ராஜேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Comments

கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்!!

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon