Primary Menu

Top Menu

September 25, 18

திருச்செந்தூர் கோவில் கடைகள் இடிப்பு : 2 வியாபாரிகள் தற்கொலை மிரட்டல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பரிகார மண்டபம் 1974ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. 556 மீட்டர் நீளம், 20 அடி அகலமும் உடைய இந்த மண்டபம் அண்மைக்காலமாக பராமரிப்பின்றி பலவீனம் அடைந்ததால் அதன் ஒரு பகுதி கடந்த 14ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பிரகார மண்டபம் இடிக்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த இடிப்பு பணிகளை திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிரிபிரகார மண்டபம் அருகே உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட சிறு கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதையறிந்த சிறு வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து கடைகள் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மறியல் கைவிடப்படாததால் 120 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வியாபாரிகள் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. விரைந்து வந்து சிறு வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon