Primary Menu

Top Menu

September 26, 18

தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி !!

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விழாவில் கலந்து கொண்டு தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்டார். பின்னர் பிரதமர் மோடி தொடர்ந்து சிறப்புரையார்றினார்.

அப்போது அவர், “அனைவருக்கும் வணக்கம், விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார். ‘தினத்தந்தி’ சேவைகளையும், சாதனைகளையும் புகழ்ந்து பேசினார். விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், திரையுலக நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் பிரதமர் மோடி இன்று கோபாலபுரத்திற்கு சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் உடன் சென்றார். மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்றனர். இந்த சந்திப்பின் போது தி.மு.க.வினரும் கோபாலபுரத்தில் இருந்தவர்களும் உற்சாகத்துடனே காணப்பட்டனர்.

மேலும் முரசொலி பவளவிழா மலரை பரிசாக பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார் . முன்னதாக கருணாநிதி வீட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அரைநாள் பயணம் என்றாலும் சென்னையில் புதிய அதிர்வை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளார் மோடி. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் அரசியல் நோக்கம் நிச்சயம் உண்டு என்றே கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon