Primary Menu

Top Menu

September 25, 18

தாயும் – மகளையும் திருமணம் செய்யும் வழக்கம் !!

வங்காள தேசத்தில் உள்ள பழங்குடியினர் மக்கள் ஒரு பாரம்பரியமான வழக்கத்தை பின்பற்றுகின்றனர். அது என்னவென்றால் விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று, இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட ஓரோல டால்போட் (30) என்ற பெண் கூறியதாவது:

நான் எனது தாய் மிட்டமோனி மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான நோட்டன் ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு கணவர் கிடைத்ததால் எனது தாய் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.

மேலும் என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் எனது வளர்ப்பு தந்தை போன்றே இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால் நான் பருவம் அடைந்தபோது எனது காதில் விழந்த அந்த செய்தி என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வளர்ப்பு தந்தையுடன், எனக்கு 3 வயது இருக்கும்போதே எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என என் தாய் என்னிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் வீட்டை விட்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது. ஆனால், எனது தாய் இதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது எனது தாய்க்கு 21 வயதாகிவிட்டது என கூறுகிறார்.

மேலும் இந்த திருமணம் குறித்து மிட்டோமோனி கூறியதாவது:-

எங்கள் இனத்தின் பராம்பரிய முறைப்படி திருமணமான ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளவேண்டும். அப்படி திருமணம் செய்து கொள்ளும்போது, அந்த விதவை பெண்ணிற்கு மகள் இருந்தால் அவளையும் சேர்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனது மகளுக்கு திருமணம் ஆகும் போது அவளுக்கு 3 வயது. தற்போது அவன் நோட்டன் ஒரு கணவராகத்தான் கருத வேண்டும். மேலும் இது எங்கள் பராம்பரியமான பழக்கம், இதனை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மிட்டோமோனி கூறியுள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon